சென்னை ஜூலை 30 சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பழைய வண்ணை நகர், தண்டையார்பேட்டை, புதுவண்ணை நகர், திரு வொற்றியூர், இராயபுரம், காசிமேடு, யானைக்கவுனி, ஏழுகிணறு, வடக்கு கடற் கரை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு, பேசின் பாலம் (Basin Bridge), எம்.கே.பி நகர், கொடுங் கையூர் மற்றும் செம்பியம், ஆகிய 15 காவல் நிலையங்கள் அய்.எஸ்.ஓ. தர சான்றிதழை, அய்.எஸ்.ஓ. தலைமை செயல் அதிகாரி கார்த்தி கேயன் வழங் கினார்.
சென்னை பாரிமுனை யில் உள்ள வடக்கு கடற் கரை காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர் ரம்யா பாரதி, உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்திய அரசாங்கத்தின், இந்திய தர கவுன்சிலின் (QCI-GOI) பாது காப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டிற்காக, மேற்படி 15 காவல் நிலையங்களுக்கு பன்னாட்டு தர கட்டுப் பாட்டுச் சான்றிதழான அய்.எஸ்.ஓ. 9001:2015 வழங்கி அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்த காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள், வரவேற்பு மற்றும் காத்திருப்பு அறை, கட்டட பராமரிப்பு போன்ற உள்கட்டமைப்பு கூறுகளை பொது மக்க ளுக்கும், காவல் துறை யினருக்கும், வசதியாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நல்ல சுற்றுச்சூழலை அளிக்க, இயற்கை சூழல் மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் காவல் நிலையப் பதி வேடுகளும் முறையாகப் பராமரிக்கப் படுகின்றன. செயல்முறை மற்றும் உள் கட்டமைப்பு கூறுகள் ஆகிய இரண்டிலும் தர நிலைகளின் தேவைகளை மேற்கூறப்பட்டுள்ள 15 காவல் நிலையங்கள் பூர்த்தி செய்து உள்ளன.
பின்னர் மேடையில் பேசிய காவல் ஆணையர், புகார் அளிக்க வரும் நபர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்தும், அவர்களின் புகார் மீது உரிய ஒரு நடவடிக்கை உட னடியாக மேற்கொள்ளவும், முதலமைச்சரின் அறிவுறுத் தலின் பேரில் காவல் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு பணிகள் செய்யப்பட்டு, தற்போது அய்எஸ்ஓ தர சான்றிதழ்கள் (ISO Certificate) பெறப்பட்டுள்ளது.15 காவல் நிலை யங்களில் மட்டும் பெறப் பட் டுள்ள நிலையில், மற்ற 102 காவல் நிலையங்களை யும்
இதே போன்று தரம் உயர்த்தும் பணிகளை மேற் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவததாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆணையர் வீரக்குமார், “ஆங்கிலேயர் களால் கட்டப்பட்ட காவல் நிலையங்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தரம் உயர்த் தப்பட்டு, பழைமை மாறாமல் வடக்கு கடற் கரை காவல் நிலையம் மற்றும் பழைய வண்ணை நகர் காவல் நிலையம் ஆகிய இரண்டு காவல் நிலை யங்கள் உள்பட 15 காவல் நிலையங்கள் அய்எஸ்ஓ தர சான்றிதழ் பெற்று உள்ளது. இதற்காக ஏராளமான காவலர்கள் உறுதுணை யாக பணிகளை மேற் கொண்டு உள்ளனர். பொது மக்கள் தங்கள் மன கவலைகளை புகாராக காவல் நிலையத்திற்கு கொண்டு வரும் போது, அவர்களின் மன நிலையை மாற்றுவதற்கான இடம் காவல் நிலையமாக இருக்க வேண்டும் என்கிற எண் ணத்தில் இது போன்று காவல் நிலையத்தின் தரத்தை உயர்த்தி, தற் போதைய சூழ்நிலைக் கேற்றவாறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் இதன் மூலம் குற்றங்கள் குறையவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.