தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (26.10.2024) எழும்பூர், அனிதா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிகளில், வடகிழக்கு பருவமழை காலங்களில் இடைவிடாது பணியாற்றிய குடிநீர், கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் 1,273 நபர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய், மிளகாய் தூள், பால் பவுடர், பிஸ்கட் மற்றும் புடவை, கைலி, போர்வை, ரெயின்கோட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.