கடந்த 1.9.2024 அன்று வெளியீடு கண்ட, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக, ‘செம்மொழி’ இதழாசிரியரும் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான எம். இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள “சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்” நூலின் விற்பனைத் தொகையில் ஒரு பகுதியை, சிங்கப்பூர் இந்தியர் மேம் பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) மூலம் சிங் கப்பூர் இந்திய சமூகத்துக்காக நூலாசிரியர் இலியாஸ் வழங்கினார். சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி இரா.அன்பரசு JP அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
“சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர் ” நூலையும், புதிய “செம்மொழி” இதழையும் அப்போது அமைச்சரிடம் இலியாஸ் வழங்கினார். அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமை சங்கத்தின் ஆலோசகரும், மேனாள் தலைவருமான ராஜ்குமார் சந்திரா, தொழிலதிபர்கள் மாமன்னன், சசிகுமார், தமிழவேள் நற்பணி மன்றத்தின் பொருளாளர் பாவலர் சோ.வீ.தமிழ் மறையான் ஆகியோர் உடனிருந்தனர்.