சென்னை, அக்.26- படிக்கும் போது மேஜையில் கடவுள் சரஸ்வதி படத்தை வைத்து விட்டு படித்தால் நிச்சயம் அறிவு பெருகும் என்று கூறிய ஆளுநர் கருத்தை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொண்டார். அநத வகையில், கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும் என்று கூறினார்.
அப்போது மாணவர்களிடம் உரையாற்றிய ஆளுநர் ரவி, “எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் “இனி வரும் காலங்களில் படிக்கும் மேஜையில் கல்வி கடவுள் சரஸ்வதியின் படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் அறிவு நிச்சயம் பெருகும். சரஸ்வதி வந்தனம் பாடலை பள்ளியில் பாட பழக்கப் படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.
படிக்கும் போது மேஜையில் கடவுள் சரஸ்வதி படத்தை வைத்து விட்டு படித்தால் நிச்சயம் அறிவு பெருகும் என்ற ஆளுநர் கருத்தை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் “It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform” என வரையறுத்துள்ளார்.
அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்