சென்னை, அக்.26- இந்தியாவின் முன்னணி மாதிரி தேர்வு தயாரிப்பு நிறுவனமான டைம் கல்வி நிறுவனம், 2024ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான அறிவியல் வினாடி – வினா போட்டிகளை பள்ளி மாணவர்களுக்கு நடத்தியது.
இந்த அறிவியல் வினாடி – வினா போட்டியில் தமிழ் நாட்டிலிருந்து 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 12000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் இறுதி போட்டிக்கு தேர்வான700க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற இறுதி போட்டியில் பங்கேற்றனர். கோவையிலிருந்து ஒரு அணி, ஈரோட்டிலிருந்து ஒரு அணி மற்றும் சென்னையில் இருந்து 4 அணிகள் என மொத்தம் அணிகள் இந்த இறுதி போட்டிக்கு தேர்வாகி இருந்தன. இறுதி போட்டியில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த தர்ஷன் ரவி மற்றும் ஆயுஷ் பரத்வாஜ் ஆகியோரின் அணி வெற்றி பெற்றது.
இதுகுறித்து டைம் கல்வி நிறுவனத்தின் மய்ய இயக்குனர் அரவிந்த் மந்திரி கூறுகையில், “நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் பருவத்தினர் வெளிக்காட்டிய உற்சாகம் மற்றும் விரைவான சிந்தனை ஆகியவற்றைக் காண்பது ஊக்கமளிப்பதாக அளிப்பதாக உள்ளது. பாடப்புத்தகங்களை தாண்டி அவர்கள் அறிவுத்திறனை மேம்படுத்தவும், புதிய சவால்களுக்கு தங்களை தயார் செய்து கொள்ளவும், அவர்களது ஆர்வத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்த ஒரு அருமையான வாய்ப்பை இந்த அக்வா ரீஜியா அறிவியல் வினாடி வினா நிகழ்வு வழங்கியுள்ளது.” என்று கூறினார்.