வல்லம், ஜூலை 30 – அணுவியல் விஞ்ஞானி, மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் நினைவுகள் நிகழ்ச்சிகளை வல்லம் – பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தில் உணர்ச்சிப்பூர்வமாக நடை பெற்றன.
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் இருக்கை மற்றும் சமூகப்பணித் துறை சார்பாக டாக்டர் ஆ.ப. ஜெ.அப்துல்கலாமின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் நிகழ்வாக மரம் நடு விழா நடைபெற்றது. இதில் திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை யின் நிறுவநர் கிரிகோரி மரக் கன்றை நட்டு விழாவினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் செ. வேலுச்சாமி, பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிறீ வித்யா, மனிதநேயம், அறிவியல் மற்றும் மேலாண்மை துறையின் முதன்மையர் முனை வர் விஜயலட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திருச்சி வாய்ஸ் அறக்கட் டளை மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப் பந்தம் கையெழுத்திடப்பட் டது. இதில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சிறீவித்யா மற்றும் வாய்ஸ் அறக்கட்டளை யின் நிர்வாகி பிரீத்தி இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இதில் சமூகப்பணித் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின் புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் சாராம் சங்களை விளக்கினார். அவர் தமது உரையில் சமூகப்பணி, மாணவர்களுக்குக் களப்பணி பயிற்சி அளிப்பது, கிராம வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடு வது, சமூக ஆய்வு மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி அளிப்பதில் இணைந்து செயல்படுவோம் என்றும், தொழில்நுட்ப ரீதியான பயிற் சிகள் பல்கலைக்கழக மாணவர் கள் மற்றும் பேராசிரியர்கள் மூலம் அளிக்கப்படும் என்றார். இந்த நிகழ்வில் கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் ஜார்ஜ், மினிகிசி இயக்குநர் முனை வர் ஜெயந்தி, ஆராய்ச்சிபுல முதன்மையர் குமரன் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி வெளியீட்டு மய்ய இயக்குநர் முனைவர் பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் இருக்கை மற்றும் சமூகப்பணித் துறை சார்பாக சமுதாய ஈடு பாடுகளில் உயர்கல்வி நிறு வனங்களின் பங்களிப்பு பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமையுரை யாற்றினார். அவர் பேசுகையில் தந்தை பெரியார் மற்றும் டாக் டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலா மின் கனவுகளை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல் கலைக்கழகம் செயல்படுத்தி வருவதாகவும், அதனை இன் னும் சிறப்பாக செய்ய அனை வரும் ஒருங்கிணைந்து பணி யாற்ற வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து வாய்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் கிரிகோரி சிறப்புரை யாற்றினார். அவர் பேசுகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவருடைய வளர்ச்சிக் கும், இயற்கையை பாதுகாக்க வும் உழைக்க வேண்டும் என்றும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்துகளை செயல்படுத்து வது குறித்தும் பகிர்ந்து கொண்டார். மேலும் சமுதாய வளர்ச்சியில் உயர்கல்வி நிறு வனங்களின் பங்களிப்பின் முக் கியத்துவத்தை விளக்கினார். இதில் சமூகப்பணித்துறை தலை வர் முனைவர் பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். இதில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தின் பேராசிரியர்கள் மற்றும் தேசிய மாணவர்படை மாண வர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.