அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆன சிறீரங்கம் கோயில் அய்யங்கார் பார்ப்பனர்கள் நடத்தும் சிறீராமானுஜம் ஆர்க் என்னும் இணைய தளத்தில் தங்களின் வாழ்க்கையோடு இணைந்த சிறீரங்கம் என்ற தலைப்பில் அவர்கள் பல செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அப்படி பகிர்ந்ததில் சிறீரங்கம் தீ விபத்து குறித்தும் எழுதியுள்ளனர். அதன் தமிழாக்கம்:
1959ஆம் ஆண்டு நடந்த தீ விபத்திற்குப் பிறகு பெருமாளின் திருமேனியை சுத்தம் செய்தபோது, மகாலக்ஷ்மியின் திருமேனி முற்றிலுமாக அழிந்துவிட்டது.
பெருமாள் சுதை திருமேனி – ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருமாளுக்கு தைலக் காப்பு செய்யப்படுகிறது.
காலப்போக்கில், தைலக்காப்பினால் திருமேனியின் அம்சங்கள் தெளிவற்றுப் போகின்றன. உண்மையில், தைலக்காப்பு பல அங்குல கனத்தில் இருந்தது தைலக்காப்பு முழுவதும் எண்ணெயால் ஆனது. ஆகவே, முக்கிய சிலையில் சிறிய பகுதியில் பற்றிய தீ – பரவியதால்தான் தீ விபத்து நடந்தது.