24.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திமுக கூட்டணி 2026 தேர்தல் மட்டும் அல்ல; அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெறும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
* திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக நூலகம் திறப்பு. கலைஞர் நூற்றாண்டையொட்டி, இது போல பிற இடங்களில் நூலகம் தொடங்க முடிவு.
* நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு பந்தல் நுழைவாயிலில் தந்தை பெரியார், காமராஜர், அம்பேத்கர் உருவ கட்-அவுட்கள் வைக்கப்படுகின்றன.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியாவில் 77 சதவீத குழந்தைகளுக்கு, பல்வகை சத்துணவுகள் கிடைப்பதில்லை. இதில், குறிப்பாக, உ.பி., ராஜஸ்தான்,குஜராத், மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை அதிகம் என தேசிய சுகாதார அமைப்பு அறிக்கை.
குடந்தை கருணா