அறிவியல் துளிகள்

2 Min Read

அய்ரோப்பிய விண்வெளி மையம் அனுப்பிய ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ விண்கலம் செவ்வாய் கோளில் உருவாகும் சிலந்திகளைப் படம் பிடித்துள்ளது. செவ்வாய் கோளில் பனிக்காலத்தில் உறைந்த கரியமில வாயு, வெயில் பட்ட உடன், உருகி உடையும்போது விரிசல்கள் உருவாகும். இவை பார்க்க சிலந்திகள் போல் தெரிகின்றன.

மேற்கத்திய பாணி கழிப்பறையைப் பயன்படுத்தும்போது மூடியை மூடாமல் ப்ளஷ் செய்வதால் நுண்ணிய கிருமிகள் வெளியே பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த கொலரடோ பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, மூடி போட்டுவிட்டு ப்ளஷ் செய்வதே சரியான முறை எனப் பரிந்துரைத்துள்ளனர்.

சனியின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டனை ஆராய விஞ்ஞானிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் வளிமண்டலம் நைட்ரஜன், மீத்தேனால் நிரம்பி இருப்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம். தட்டானை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘டிராகன் ப்ளை’ எனும் விமானம் 2034ஆம் ஆண்டு டைட்டனுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என, நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சாதாரண வலி, காய்ச்சலுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து ஆஸ்ப்ரின். 4 ஆண்டுகள் 238 நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த மருந்து, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுத்துவதை 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து, புற்றுநோய்க்கு எதிராகச் செயலாற்றும் செல்களைத் துாண்டிவிடுவதே இதற்குக் காரணம்.

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி யுரேனஸ் கோளின் படங்களை நாசாவிற்கு அனுப்பி உள்ளது. இந்தத் தரத்தைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் இனி நம்மால் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களையும் இவ்வாறு துல்லியமாகப் படம் எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
சனிக்கோளைச் சுற்றி வளையங்களும், பல துணைக்கோள் இருப்பதையும் நாம் அறிவோம். ஆனால், முதன்முறையாக விஞ்ஞானிகள் சனி, சூரியனைச் சுற்றி வரும் அதே பாதையில், சுற்றி வருகின்ற ஒரு விண்கல்லைக் கண்டறிந்துள்ளனர்.

கோண்டுவானாக்ஸ் பாரைசென்சிஸ் (Gondwanax paraisensis) என்பது ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய, நான்கு கால் உயிரினம். தோராயமாக ஒரு சிறிய நாயின் அளவு இருக்கும். அதாவது 1 மீட்டர் நீளமும், 3 முதல் 6 கிலோ எடையும் கொண்டது. 23.7 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட இதனுடைய தொல்லெச்சத்தை பிரேசில் நாட்டில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *