கண்டுபிடிப்புகள் எல்லாம் கற்பனை யிலிருந்து பிறக்கின்றன என்பர். அதை உறுதிப்படுத்தும் விதமாக, பிரான்சு நாட்டைச் சேர்ந்த டப்ட்ஸ் பல்கலை விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு அமைந்துள்ளது. அப்படி என்ன கண்டு பிடித்தார்கள்?
நாம் அனைவரும் நிச்சயமாக ஸ்பைடர்மேன் படத்தைப் பார்த்திருப் போம். அதில் கதாநாயகனான ஸ்பைடர் மேன் தன்னுடைய கைகளில் இருந்து ஒரு விதமான பசையை உருவாக்குவார். அதைக் கொண்டு தன்னுடைய மொத்த உடலையும் இழுத்து, ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பறந்து சென்று மக்களைக் காப்பாற்றுவார்.
அவர் கையில் இருக்கின்ற பசை அந்த அளவு உறுதியானதாக இருக்கும். அப்படியான ஒன்றைத்தான் விஞ்ஞானி கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் சிலந்தியின் வலையைப் பயன்படுத்தவில்லை. மாறாக அதைவிட மிகச் சுலபமாக கிடைக்கின்ற பட்டுப்புழுக்களின் பசை யைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பட்டுப்புழுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பசையில் சிலவிதமான வேதிப் பொருட்களை கலந்து பரிசோதித் தனர்.
ஒரு சிறிய ஊசியின் வழியே இந்தப் பசையை செலுத்தினால் ஆரம்பத்தில் இது திரவமாக இருக்கும், மிகக்குறுகிய நேரத்தில் கெட்டியாக மாறிவிடும். மாறிய பிறகு இந்தப் பசை நுாலின் எடையை விட 80 மடங்கு அதிக எடை உள்ள பொருளைச் சுமக்கும் அளவு பலம் பெற்று விடும்.
இந்தப் புதிய கண்டு பிடிப்பு அறிவியல் ஆர்வலர்களிடையே வர வேற்பைப் பெற்றுள்ளது. இதை தசை பொறியியல், ஒட்டும் திரவங்களின் தயாரிப்பு முதலியவற்றில் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.