கும்மிடிப்பூண்டி, அக்.24- கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பில் டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர்.அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா மகிழ்வாக அதிக விடுதலை சந்தாக்களை வழங்கிட கும்மிடிப்பூண்டி மாவட்ட கழக இளைஞரணி கலந் துரையாடல் கூட்டத்தில் முடிவு.
13.10.2024 ஞாயிறு காலை 10 மணி அளவில் கும்மிடிப்பூண்டி மாவட்டம் பெரியபாளையத்தில் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட் டம் எழுச்சியுடன் நடை பெற்றது.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சோழபுரம் ப.சக்கரவர்த்தி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜெ. பாஸ்கரன், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அய்.அருணகிரி முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ் தொடக்க உரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் கருத்துரை ஆற்றினார். நிகழ்வில் பொன்னேரி நகர தலைவர் வே.அருள். பொதுக்குழு உறுப்பினர் ந.கஜேந்திரன். சோழவரம் ஒன்றிய கழக தலைவர் பொன்னேரி மு. சுதாகர் பொன்னேரி நகர செயலாளர் வடகரை மு. உதயகுமார் புழல் ஒன்றிய கழக தலைவர் முருகன். மீஞ்சூர் ஒன்றிய கழக தலைவர் க. சுகன்ராஜ் பொன்னேரி நகர இளைஞ ரணி செயலாளர் எழில். மற்றும் ஏராளமான தோழர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில், திராவி டர் இயக்க மூத்த ஊடக வியலாளரும், முரசொலி ஆசிரியருமான முரசொலி செல்வம், அவர்கள் மறைவுக்கு இக்கூட்டம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
உலகத் தலைவர் தத் துவத்தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் மகிழ்வாக கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக நகரங்கள், கிரா மங்கள், வாரியாக புதிய கிளைகள் அமைத்து கழ கக் இலட்சிய கொடியை ஏற்றி மகிழ்வது எனவும், கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார் பில் தொடர்ச்சியாக தெருமுனை பிரச்சாரம், துண்டறிக்கைப் பிரச்சாரம், பல இடங்களில் தகவல் பதாகைகள் அமைப்பது எனவும், கும்மிடிப்பூண்டி மாவட்டம் முழுவதும் கழக இளைஞரணி, அமைப்பை புதுப்பித்து மேலும். ஏராளமான இளைஞர்களை, இணையச் செய்வது எனவும், உலகின் ஒரே, பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழை அனைவரிடம் சேர்க்கும் விதமாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு இளை ஞரணி சார்பில் அதிக விடுதலை சந்தாக்களை வழங்கிட முடிவு செய் யப்பட்டுள்ளது எனவும், நவம்பர் 26 ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டிற்கு கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக பெருந்திரளாக கலந்துகொள்வோம் என வும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.ஆகாஷ் நன்றி கூறினார்.