சிவகங்கை, அக். 24- சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சிவகங்கை கே.ஆர். தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சு. அரசாங்கம் தலைமையேற்றார்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் பேரா. மு.சு கண்மணி, காரைக்குடி பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ந. செல்வராசன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள் .
மாநில அமைப்பாளர் ஒ முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் பற்றி மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி. மோகன் உரையாற்றினார் . பகுத்தறிவாளர் கழகம் ஏன்? இந்த அமைப்பின் செயல்பாடுகள் என்ன? இந்த மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள் கடந்த காலத்தில் ஒவ்வொரு செயல் திட்டங்களில் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி எடுத்துரைத்து, அமைப்பை பரவலாக்க வேண்டியது பற்றியும், விரிவாக்க செய்ய வேண்டியது பற்றியும் எடுத்துரைத்தார் .
பகுத்தறிவாளர் கழக உறுப்பினராக என்ன தகுதிகள் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், கழகத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதையும் எடுத்து கூறினார்
மாவட்ட அளவில் உள்ள பொறுப் பாளர்கள் மாநில பொறுப்பாளருடன் தொடர்பு கொள்வது எப்படி? அதுபோலவே மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்குள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும், மாதம் ஒருமுறை மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்றும், சந்திக்கும் இடம், நேரம் ஆகியவை பற்றியும் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறினார்..
பகுத்தறிவாளர் கழக பணியே கருத்தாளர் களை உருவாக்க வேண்டியது,
பிரச்சாரம் செய்ய வேண்டியது, மக்க ளுக்கு அறிவியல் உணர்வை ஊட்டுவது,
அறிவியல் மனப்பான்மையை வளர்க் கச் செய்வது என்பதையும், அப்படி முன் னெடுத்துச் செல்லப்படுகின்ற செயல் திட்டங்களை எவ்வாறு சிக்கனமாகவும், செலவுகள் இல்லாமலும் செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
சிறிய குறைந்த விலையுடைய இயக்க புத்தகங்களை எப்போதும் பொறுப்பாளர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். தன்னோடு பழகுவார்கள், பழகாதவர்கள் என அனைவ ரிடமும் தக்க நேரத்தில் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும் .
ஒவ்வொரு பகுத்தறிவாளர் கழக அழைப்பிதழிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51ஏ[ஹெச்] அச்சடிக்கப்பட வேண்டும், என்பதையும் நாம் அரசி யல் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல் படுகிறோம் என்பதையும் அதன் மூலம் தெரிவிக்க வேண்டும். என்பதையும் எடுத் துரைத்து,
பகுத்தறிவாளர் கழகத்தில் பணியாற்ற விட்டால் என்ன விளைவுகள் என் பதை எடுத்துரைத்தார். கட்டாயம் பணி யாற்றுங்கள் உங்களுடைய அடுத்த தலைமுறை பயனடைய வேண்டும் என்றால் பகுத்தறிவாளர் கழகத்தில் பணியாற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்லி,
இந்த கூட்டத்தின் நோக்கம் சிவகங்கை மாவட்டத்தில் அமைப்பை கட்டுவது, சிவ கங்கை மாவட்டத்தில் எப்படி அமைப்பை வலுப்படுத்த முடியும் என்பதையெல்லாம் பற்றி வந்திருக்கிறவர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு முடித்தார்
தொடர்ந்து திருப்பத்தூர் பொதிகை கோவிந்தராஜன், திருப்பத்தூர் வைகை பிரபா, சிவகங்கை மோகன்ராஜ், சிவகங்கை அனீத் குமார், திருமலை மனோஜ் குமார், மேலவாணியின் குடி வித்யா, சித்தலூர் ஜெயபவனேஷ் காளையார் கோயில் அரவிந்தன், சிங்கம்புணரி அடைக்கலம், சிங்கம்புணரி லட்சுமணன், சிவகங்கை பூமிநாதன், திருப்பாச்சேத்தி அக்னி, வைய களத்தூர் தமிழ்வாணன், சிவகங்கை செல்லமுத்து, வையகளத்தூர் தங்கராசன், வழக்குரைஞர் சேவுகராஜ் ஆகியோர் சிவகங்கையில் இயக்க பணியை செய்வது பற்றி தங்களது கருத்துகளை கூறினார்கள்.
மாவட்ட கழக அமைப்பாளர் ஆனந்த வேல் பகுத்தறிவாளர் கழகத்துக்கு முழு ஒத்து ழைப்பினை வழங்கி அமைப்பை இன்னும் பரவலாக்க வேண்டும் என்று கூறினார்.
மாவட்ட செயலாளர் பெரு.ராஜாராம் அமைப்பை வலுவாக்கிட, பிரச்சாரத்தை தொடர் பணியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறினார்.
காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ந. செல்வராசன் இயக்கம் செயல்பட வேண்டியதன் கட்டாயத்தை எடுத்துக் கூறினார்.
காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிட மணி பகுத்தறிவாளர் கழகம் தோன்றியது பற்றிய வரலாறை அழகாக எடுத்துரைத்தார். ஆரம்ப காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் பணியாற்றியவர்களைப்பற்றியும், அவர்களது சிறப்புகளை பற்றியும் எடுத்துரைத்தார்.
தலைமை கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி ராமேசுவரம் பகுத்தியில் பகுத் தறிவாளர் கழகம் தோன்றிய வரலாறு பற்றி கூறினார். சிவகங்கையில் எப்படி அமைப்பை நடத்த வேண்டும் என்பதைக்கூறினார்.
மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் இன்பலாதன் சிவகங்கை மாவட்டம் பகுத்தறிவாளர் கழகத்துக்கு ஆற்றிய பணிகளை தொகுத்துக் கூறினார்.
தொடர்ந்து சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இர. புகழேந்தி மாவட்டத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். எப்படி எல்லாம் இயக்கம் செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்தார் .
தொடர்ந்து மாநில அமைப்பாளர் ஓ.முத் துக்குமார் மாவட்டத்தின் அமைப்புகள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும் பேசினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி சிவகங்கை மாவட்டத்தில் இயக்கத்தை கட்டமைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். பொறுப்பாளர்கள் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும், நாம் இந்த பொறுப்பை மகிழ்வாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இறுதியாக பேசிய பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மாவட்டத்தின் பகுத்தறிவாளர் கழக அமைப்பு இரண்டாண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்டது. தொடர்ந்த அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்து, இன்னும் இந்த அமைப்பு வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துச் சொல்லி, பொறுப்பாளர்கள் தங்களுடைய பொறுப்புகளை பதவி அல்ல அது பொறுப்பு என்பதையும், அதை மிக்க கடமை உணர்வோடு செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.
எப்படி பணியாற்ற வேண்டும் என்பதையும், எப்படி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும், புதிய உறுப்பினர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி, இன்னும் மூன்று மாதத்தில் 100 உறுப்பினர்களோடு கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பதையும், சொல்லி புதிய மாவட்ட பொறுப்பாளர்களை மாவட்ட திராவிடர் கழக தலைவர்,மாநில அமைப்பாளர், மாவட்ட காப்பாளர், பக மாநில அமைப்பாளர் ஆகியோரிடம் கலந்துரையாடி அறிவித்தார்
மாவட்டத் தலைவர் சு ராஜாங்கம்
மாவட்ட செயலாளர் வைகை பிரபாகரன்
மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜன்
மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர்
மாவட்ட துணைச் செயலாளர் மு.மோகன்ராஜ்
மாவட்ட அமைப்பாளர் சு.செல்லமுத்து
கூட்டத்தில், மாவட்ட விவசாய அணி செயலாளர் பெரிய கோட்டை சந்திரன், ருங்காக்கோட்டை லெ.பன்னீர்செல்வி அம்மாள் ஆகியோரது மறைவுக்கு இக்கூட்டம் தனது இரங்கலை தெரிவிக்கிறது எனவும், 2024 டிசம்பர் மாதம் 28,29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுதந்திர சிந்தனையாளர் மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதெனவும், மாவட் டத்தில் பகுத்தறிவாளர் கழக அமைப்பை ஒன்றிய அளவில் விரிவுபடுத்திட உரிய நடவடிக்கை எடுப்பது எனவும், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைக்க உரிய நடவடிக்கை எடுப்பது எனவும் தீர் மானிக்கப்பட்டது.
இறுதியாக மாவட்ட அமைப்பாளர் செல்லமுத்து நன்றி கூறிட கூட்டம் முடிவுற்றது.