பிற இதழிலிருந்து…ஆளுநர் ரவியை திரும்பப் பெறுக !

2 Min Read

‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம்!

குறுகிய கால நட்புறவுக்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. பிரசார் பாரதி நிகழ்ச்சியில் மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தை திரித்து ஒலிக்கச் செய்ததில் இந்த முறை மோதல் உருவானது. 1970 முதல் அதிகாரப்பூர்வ விழாக்களில் வணங்கி வரவேற்கும் பாடலாக இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, டிசம்பர் 2021 முதல் மாநிலத்தில் அலுவலக ரீதியாக அறிவிக்கப்பட்டது.

ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 55 வினாடிகள் ஒலித்த இந்த கீதத்தில் “திராவிட நல் திருநாடும்” என்னும் சொல் தவிர்க்கப்பட்டது. இது கவனக் குறைவு என விவரிக்கப்பட்டா லும் மேடையில் அதை சரி செய்ய எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தவறுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ‘‘ரவி ஆளுநரா?அல்லது ஆரியரா? ஒருவேளை ஆரியராக இருந்தால் திராவிடம் குறித்த அலர்ஜியால் அவதிப்படும் அவர் தேசிய கீதத்திலிருந்து திராவிடம் என்ற வார்த்தையை நீக்கும் ஆலோசனையை முன்மொழிவாரா?’’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் இதைக் கண்டு கோபமடைந்து ஆரியர் என்ற குறிப்பை இனவெறி என விவரித்தார். ஆரியர்கள், திராவிடர்கள் என்ற கருத்து இனரீதியான பிளவு என்பதை காட்டிலும் புவியியல் அடிப்படையுடன் தொடர்புடையது.ஆங்கிலேயர்கள் தங்களின் தேவைக்கேற்ப அதை இனம் என மாற்றினர் என்று ஆளுநர் தன்னுடைய நம்பிக்கையை ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் தன்னுடைய விளக்கத்திற்கு மாறாகஅவரே ஆரியர் என்னும் குறிப்பைஇனவெறி என்று விவரிக்கிறார். தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு கள் முதலமைச்சரின் உயர் அரசியல் அமைப்பு பதவியின் கண்ணியத்தை குறைத்து விட்டதாகவும் வாதிட்டார்.

ஆனால் திராவிடம் என்பது பிரிவினை வாத உணர்வை வளர்க்கும், ஒரே இந்தியா என்ற எண்ணத்தை ஏற்காத சூழலை உரு வாக்கும், காலாவதியான ஒரு சித்தாந்தம் என தொடர்ந்து பேசி வந்துள்ளார். மாநிலத்தின் இரு மொழிக் கொள்கை மொழியியல் அடிப்படையில் நிற வெறிக்கு வழி வகுக்கிறது என்றும் கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களின்மனதில் ஏராளமான நச்சுத்தன்மைபுகுத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய கருத்துகள் அவர் திராவிடம் பற்றிய குறிப்புகளுக்கு எதிரானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அரசின் செயல்பாட்டின் மீதான அவரது அதிக நாட்டம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான அவரின் விரோதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் ரவியை இப்போதுதிரும்பப் பெற வேண்டும்.

நன்றி: ‘தி இந்து’ ஆங்கில நாளேடு – 22.10.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *