புதுச்சேரி, அக்.24- விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் நேற்று (23.10.2024) அளித்த பேட்டி:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அண்மையில் செய்தியா ளர் சந்திப்பின்போது, திட்டமிட்டு அவதூறு பரப்பி இருக்கிறார். அவரே ஆட்களை ஏற்பாடு செய்து கேள்வி கேட்க வைத்து அதற்கு அவர் விளக்கம் சொல்கிறார். தன்னிச்சையாக செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்வியாக அது இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திட்டமிட்டு களங்கத்தை ஏற்ப டுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் இதில் வெளிப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் எந்த வகையிலும், எந்த சமூகத்துக்கும் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் எதிராக அல்லது ஆதரவாக ஜாதியவாத அடிப்படையில் செயல்பட்டதில்லை. தொடக்கத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகள், அருந்ததியர் சமூகத்துக்கு எதிரானது என்பது போன்ற ேதாற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அதில் உள்நோக்கம் இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் நீதிமன்றமே கண்டிக்கும் வகையில் இருப்பது வேதனைக்குரியது. நடிகர் விஜய்யின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.