பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு மின்மாற்றியில் மழையின் காரணமாக மின் வயர் இணைப்புள்ள இடத்தில் ஏற்படும் இடைவெளியில் நீர் தேங்கி மின்சாரம் வரும் போது வெப்பமாகி ஆவியாகும்; தீப்பொறியும் கிளம்பும் – இது வழக்கமான ஒன்றுதான்.
இந்த நிலையில், ‘‘இந்த டிரான்ஸ்பார்மரில் மோசமான ஆவிகள் இருப்பதாகவும், ஊரில் உள்ள கோவிலில் இருக்கும் காலபைரவரைப் பார்த்து அவ்வப்போது அஞ்சி அவை எழும்பி ஓடுகின்றன’’ என்றும் கூறியுள்ளார் – அவ்வூர் அர்ச்சகர் பார்ப்பனர்.
இதனை அடுத்து ‘‘ஆவிகளை நிரந்தரமாக விரட்ட பைரவ பூஜை ஒன்று டிரான்ஸ்பார்மர்க்கு செய்யவேண்டும்’’ என்று கூறி பணம் வசூல் செய்து, பூஜையும் நடத்தியுள்ளார்.
இந்தப் பூஜைக்காக மின்சார ஊழியர்கள் பூஜை முடியும் வரை மின்சாரத்தை நிறுத்தி வைத்தனர். மேலும் பூஜைப் பொருள்களுடன் டிரான்ஸ்பார்ம் மேலே ஏறி, சந்தனம், பூ போன்றவற்றை வைத்து தேங்காய் உடைத்தனர்.
கீழே பார்ப்பன அர்ச்சகர் சத்தமாக மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார்.
பூஜைகள் முடிந்த பிறகு ஊர் மக்கள் காணிக்கையாக 10 ஆயிரம் ரூபாயும், கோதுமை மற்றும் பால், காய்கறிகளும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
சுரண்டல், அதுவும்
(அ)விஞ்ஞான ரீதியாக எப்படி எல்லாம் நடக்கிறது பார்த்தீர்களா?
– மயிலாடன்