ஜெயங்கொண்டம், அக்.23- பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப் பெற்ற அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் 17.10.2024 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளியின் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ/ மாணவிகள் சுமார் 432 பேர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பெரியார் பள்ளி மாணவர்கள் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் மூன்றாம் இடமும் பிடித்தனர். முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பெரியார் பள்ளி முதல்வர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பேசுகையில் இப்பள்ளி, கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மிக சிறப்பாக பங்காற்றி வருகிறது என்று குறிப்பிட்டார்.
போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ்,
ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.