காஞ்சிபுரம், அக்.23- காஞ்சி மாநகரின் பிள்ளை யார் பாளையம் பகுதி புதுப் பாளையம் தெருவில், 17.10.2024 வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில், கழகத்தின் சார்பில், நவம்பர் 26இல் ஈரோட்டில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் வி. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பா. இளம்பரிதி முன்னிலை வகித்து உரையாற்றினார். வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர் எஸ். செல்வம், மாமன்ற உறுப்பினர் கே. குமரவேல் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவுப் பாடகர் உலகஒளி தந்தை பெரியார் குறித்து பாடல் பாடினார்.
பேசும் கலை வளர்ப்போம் நிறுவனர் மருத்துவர் மு. ஆறுமுகம், மாவட்ட திராவிடர் கழக இணைச் செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன், பகுத்தறிவாளர் கழகத்தோழர் பல்லவர்மேடு சேகர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட அமைப்பாளர் சாரதா தேவி, உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன், தமிழ் உரிமை கூட்டமைப்பு நிறுவனர் காஞ்சி அமுதன், தலைமை கழக அமைப்பாளர் பு. எல்லப்பன், அறிவு வளர்ச்சி மன்ற நிறுவனரும் திமுக தலைமை கழக சொற்பொழிவாளருமான நாத்திகம் நாகராசன் ஆகியோர் உரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளரும் திராவிடர் கழகச் சொற்பொழிவாளருமான முனைவர் பா. கதிரவன் சிறப்பு ரையாற்றினார்.
அவர்தம் உரையில், சுயமரி யாதை இயக்கத்தின் தோற்றம், முதல் சுயமரியாதை மாநாடும் அதனுடைய தீர்மானங்களும், இந்தி எதிர்ப்புப் போராட்டம், நீதிக்கட்சித் தலைவராக பெரியார், பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம், திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம், அண்ணாதுரை தீர்மானம், ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்ட எரிப்பு, அண்ணா ஆட்சிக்கு வந்து செய்த சாதனைகள், பெரியாருக்குப் பின் திராவிடர் கழகச் சாத னைகள், சமத்துவமாக்கும் திராவிடக் கொள்கையை திராவிட மாதிரி ஆட்சி செய்யும் முதலமைச்சர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி பெரியாரை உலகமயமாக்கும் செயல்பாடுகள் முதலிய செய்திகள் குறித்தும் உரையாற்றினார். கட்சிகளைக் கடந்து சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண் டும் என்று வேண்டுகோள் விடுத் தார். பகுத்தறிவாளர் கழகத் தோழர் சே. நவின் நன்றி கூறினார்.
கூட்டத்தில் காஞ்சி மாநகர திராவிடர் கழகச் செயலாளர் ச. வேலாயுதம், திமுக தலைமை கழக சொற்பொழிவாளர்கள் காரை கு. அருளானந்தம், விஷார் தமிழரசன், ஓரிக்கை சன். சங்கர், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் தோழர் மகேஷ், தன்னாட்சித் தமிழகம் பெ. பழனி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் கழகத் தோழர் போளூர் பன்னீர்செல்வம், படப்பை கழக பொறுப்பாளர் சந்திரசேகரன், அருண்குமார், வழக்குரைஞர் தமிழரசு, தோழர் மகேந்திரன், உள்ளிட்டோரும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.