புதுச்சேரி, அக். 22- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 19.10.2024 அன்று மாலை 6 மணியளவில் சண்முகாபுரம் & மேட்டுப் பாளையம் அருகில் அமைந்துள்ள நகராட்சி கலையரங்கில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இளைஞரணித் தலைவர் தி. ராசா தலைமை ஏற்று உரையாற்றினார்.
கழக பொதுக்குழு உறுப்பினர் விலாசினி ராசு வரவேற்புரை நிகழ்த்த, தொடர்ந்து உழவர் கரை நகராட்சி கழகத் தலைவர் சு. துளசிராமன்,திராவிடர்கழக தொழிலாளரணித் தலைவர் வீர.இளங்கோவன்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர், புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழக தலைவர் வே.அன்பரசன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
அதனை தொடர்ந்து திருவாரூர் தி.மு.க மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும் மேனாள் கழகத் தலைவருமான தெ.தியாகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி கதிர்காமம் தொகுதி செயலாளர் ஜெ. ஜெயச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கதிர்காமம் தொகுதி செயலாளர் மு. கண்ணன், திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி, திராவிட முன்னேற்ற கழக தொகுதிச் செயலாளர் ஏ.பி.ஆர் வடிவேல் ஆகியோர் உரை நிகழ்கினார்கள். இறுதியாக கழக பேச்சாளர் தேவ. நர்மதா ஒரு மணி நேரம் தன்னுடைய உரையை நிகழ்த்தி நிறைவு செய்தார். திராவிட மாணவர் கழகச் செயலாளர் ச. பிரபஞ்சன் நன்றி கூறினார். கழக காப்பாளர் இர.இராசு நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார்.
திராவிடர் கழக, இந்தியா கூட்டணி,சமூக அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.