புதுச்சேரி, அக். 23- பெரியார் பெருந் தொண்டர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுயமரியாதைச் சுடரொளி வீ.கண்ணையன் தன்னுடைய 91ஆம் அகவையில் வயது மூப்பின் காரணமாக 20-10-2024 அன்று இயற்கை எய்தினார்.
மறைந்த சுயமரியாதைச் சுடரொளி வீ.கண்ணையன் உடல்மீது திராவிடர் கழகக் கொடி போர்த்தப்பட்டு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத் தப்பட்டது.
புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் திருவாரூர் மாவட்டத் தலைமை கழக அமைப்பாளர் வீ. மோகன் முன்னி லையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் கி. அறிவழகன், காப்பாளர் இர.இராசு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர், மாவட்டக் கழகத் துணைத் தலைவர் மு. குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் விலாசினிராசு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச் செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், இளைஞரணித் தலைவர் தி. இராசா, திராவிடர் கழக நகராட்சி பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், எஸ். கிருட்டினசாமி, செ.இளங்கோவன், சு. துளசிராமன், ஊடகவியலாளர் பெ. ஆதிநாராயணன், தோழர் அ.ச. தீனா உட்பட பலர் இரங்கல் உரை ஆற்றினர்.
மேலும், மாநில விவசாயத் தொழிலா ளரணிச் செயலாளர் வீர. கோவிந்தராசு, திருவாரூர் நகர கழகத் தலைவர் கோ.சிவராமன், செயலாளர் பி. ஆறுமுகம், மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தலைவர் கடவாசல். குணசேகரன், அமைப்பாளர் ஞான.வள்ளுவன், சீர்காழி ஒன்றியத் தலைவர் சா.சந்திரசேகரன், தி.மு.க கடவாசல் ஜெ. அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கல் செய்தி கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. மேலும், நகல் எடுத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மறைந்த ஆசிரியர் வீ.கண்ணைய னாரின் விருப்பத்திற்கு ஏற்பவும், பகுத்தறிவு நெறிப்படியும் அவருடைய பிள்ளைகள் பத்மா சந்தான கிருஷ்ணன், தேன்மொழி ராமசாமி ஆகியோர் எந்தவித மூட சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்ச்சியை நடத்தினர். அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
கழகத் தோழர்களின் வீரவணக்க முழக்கத்துடன் வீ.கண்ணையனாரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டு அஜிஸ் நகர் சுடுகாட்டில் எரியூட் டப்பட்டது.