மகளிரின்…
பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரச அறிமுகப்படுத்த உள்ளது.
அரசப் பள்ளிகளில்…
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) அமைக்கும் திட்டம். தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் ரூ.455.32 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இணைய தள வசதி
தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணைய தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க…
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணா மலை – செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கோளாப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற் பேட்டையில் 103 காலி தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. புதிதாக தொழில் தொடங்க, தொழில் மனைகளை வாங்க விரும்புவோர் http:www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட சிட்கோ மேலாளர் இசக்கி ராஜன் தகவல்.
நீலக்கொடி
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், நாகை காமேஸ்வரம் கடற்கரையை மேம்படுத்துவதற்காக நீலக்கொடி திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.