ஏ.டி.எம். திருட்டுக் கும்பலைப் தீரமாக விரட்டிப் பிடித்த தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாமக்கல், அக். 23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.10.2024) நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது, அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, குழு ஒளிப் படம் எடுத்துக்கொண்டார்.

கடந்த மாதம் கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்தனர்.

ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்து விட்டு கொள்ளைக் கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப் படையில் குமாரபாளையம் அருகே காவல் துறையினர், கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தியும், நிற்காமல் சென்றது. இதையடுத்து விரட்டி சென்ற காவல் துறையினர் கண்டெய்னர் லாரியை மடக்கி கொள்ளைக் கும்பலை பிடித்தனர்.
இந்த நிகழ்வைப் பாராட்டி கேரள தலைமை காவல் துறை இயக்குநர் டாக்டர். ஷேக் தர்வேஷ் சாஹிப், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, நிகழ்வு நடைபெற்ற 6 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்தது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின்போது. ஒருங் கிணைந்து சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் மாவட்ட காவல் கண் காணிப்பாளர். காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமைய வர்மன், முருகேசன், ராஜா, காவல் ஆய்வாளர்கள் தவமணி, ரங்கசாமி, காவல் துணை ஆய்வா ளர்கள் என மொத்தம் 23 காவல் துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளை யும் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வின்போது, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சவு.டேவிட்சன் தேவாசிர்வாதம், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *