சென்னை, அக்.23 ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவதுதான் தி.மு.க.வின் நோக்கம். தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி ஜோசியராக மாறிவிட்டார்.
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்களே அதுபோல எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதால் பொறாமையில் பேசி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் விவாதங்கள் இருக்கலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது. எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை; கொள்கைக்காக அமைக்கப்பட்டது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் விவாதங்கள் இருக்கலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Leave a Comment