கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

22.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அளவான குடும்பம், அளவற்ற மகிழ்ச்சி – இந்து அறநிலையத் துறை சார்பில் 31 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்து முதலமைச்சர் கருத்து.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மதச்சார்பின்மை எப்போதும் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். அரசமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற சொல் மற்றும் பகுதி III இன் கீழ் உள்ள உரிமைகளை ஒருவர் சரியாகப் பார்த்தால், மதச்சார்பின்மை அரசமைப்பின் முக்கிய அம்சமாக கருதப்பட்டது என்பதற்கு தெளிவான அறிகுறி உள்ளது” என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்புக் கூறியது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வயநாடு இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங் காவுக்கு சோனியா பிரச்சாரம் செய்ய உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2014 மக்களவைத் தேர்தலுக்காக மாநிலத்தில் பிரச்சாரம் செய்தார்.
தி இந்து:
* குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத் தியதற்காக மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது: காங்கிரஸ் வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
* “நீங்கள் நாட்டின் அரசமைப்பு மற்றும் சட்டப் புத்தகங்களின் முன் அமர்ந்து அவர்களிடம் உதவி பெற்றிருக்க வேண்டும்” என ஆர்ஜேடி சட்டமன்ற உறுப்பினர் அன்சார் நயீமி, அரசியல் சாசனத்திற்கு பதிலாக தொழுகையை தலைமை நீதிபதி சந்திரசூட் நம்பியிருப்பது குறித்து கருத்து.
* குஜராத் கலவரம் தொடர்பான 2023 பிபிசி ஆவணப் படத்தைத் தடுக்கும் முடிவின் அசல் பதிவுகளை கொண்டு வாருங்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *