வல்லம், அக். 22- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் பிறந்த நாளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிவியல் அறிஞரும், மேனாள் குடியரசுத் தலைவருமாகிய ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் “இளைஞர்களின் எழுச்சி” நாளாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி மாணவ மாணவி களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகியவை நடைபெற்றது.
15.10.2024 அன்று இக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா தலைமையுரை வழங்கினார். டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்த அவர் அப்துல்கலாம் அவர்களின் சிந்தனைகளை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங் கப்பட்டன.
இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.அய்ய நாதன் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாத னைகளை பற்றிய உரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஆர்.மணிவண்ணன், ப.முத்துக்குமாரபதி மற்றும் ஞா.செங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.