ஈரோடு, அக்.22- ஈரோட்டில் பல்வேறு துறைகளின் சாா்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ. 3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஈரோடு மாவட்டத்தில் 43,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்வில் அந்தியூா் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கஸ்தூரி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகம்மது குதுரத்துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பெ.இளங்கோ, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், தாட்கோ மேலாளா் அா்ஜுன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா் ஆா்.பி.மோகன் உட்பட தொடா்புடைய துறை அலுவலா்கள், பயனாளிகள் பங்கேற்றனா்.