திருச்சி, சிறுகனூரில் 27ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பெரியார் உலகம் வளாகத்தில் 95 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய வுள்ளது. முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது. அதில் நூலகம் ,ஆய்வகம், பயிலரங்கம், குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்க ளுடன் அமைக்கப்படவுள்ளன.பல்வேறு மூத்த பொறியாளர்கள் கண்காணிப்போடு இக்கட்டுமானப்பணி சிறப்பாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தனி உலகமாக அமையவுள்ள பெரியார் உலகம் கட்டுமானப் பணிகள் அனைத்தும் தோராயமாக 108 கோடியில் நிறைவேற்றப்படவுள்ளது.
முதல்கட்டமாக :14.09.2024 காலை 10.30 மணியளவில் பெரியார் சிலைக்கான பீடம் அமைக்கும் பணிக்கான அடித்தளம்(கான்கிரீட்) அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ,அன்புராஜ் அவர்கள் கலந்துகொண்டார்.
11.10.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர மற்றும் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையில் வரும் காலங்களில் ஏற்படும் பருவமழை மற்றும் அவசர தயார்நிலை குறித்து ஒப்பந்தகாரர், கன்சல்டன்ட் (OCEAN, CBRE) ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
18.10.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் …பணி நிலையின் வளர்ச்சி மற்றும் மழையினால் ஏற்படுகின்ற பாதிப்பு குறித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மீண்டும் கள ஆய்வு செய்தார்.அவருடன் பொறியாளர்களும் உடனிருந்தனர்.
20.10.2024 காலை 7 மணியளவில் பெரியார் உலகம் கட்டுமானப்பணி வேலைகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பார்வையிட்டார்.
அவருடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி, பூங்குன்றன், கழகத் தோழர்கள் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
பெரியார் உலத்தின் முன் நுழைவு வாயிலுக்காக 430 மீட்டர் நீளமுள்ள அணுகு சாலை மற்றும் 100 மீட்டர் நீளமுள்ள அழகான புல்வெளிகள் அமைக்கும் பணி (மதிப்பீடு 1.05 கோடி) ஈரோட்டைச் சார்ந்த எம்.எம். கட்டுமான நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அந்த வேலை முடிக்கப்பட்டு, அதற்குண்டான தடையில்லா சான்றிதழ் விண்ணப்பம் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
பீடம் மற்றும் சிலைக்கான அடித்தளத்திற்கு தேவையான மண் தோண்டும் பணி முழுமையாக நிறைவுற்று, அடித்தளம் அமைக்கும் பணியும் 50 சதவீதத்திற்கு மேலாக முடிந்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 28 தூண்களில் இதுவரை 16 தூண்கள் பணி முடிவதற்கு 25 கான்கிரீட் ட்ரக்குகள் பயன்படுத்தப்பட்டு, அதனைச்சார்ந்த பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மீதமுள்ள தூண்கள் அனைத்தும் வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆலோசனைக்காக (Design report) பெரியார் உலகம் கட்டட வடிவமைப்பு அறிக்கை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பணியின் ஆலோசனை மற்றும் மேற்பார்வைக்காக CBRE ,PR CONSULTANT – PADGRO, INNOWELL, POLUX. ஆகிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு பெரியார் உலகத்தின் நிருவாக அதிகாரிகள், பொறியாளர்களுடன் வாரம் மற்றும் மாதம்தோறும் பணிகளின் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் பொறி யாளர்கள் மற்றும் வேலையாட்கள் தோராயமாக 100 நபர்களுக்கு மேல் வேலை செய்து கொண்டி ருக்கிறார்கள்.
இந்தக்கட்டுமானப் பணிகள் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஓசன் (Ocean) கட்டுமான நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. மேலும் இப்பணிகள் 14.09.2024இல் தொடங்கப்பட்டு, 24 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வேலைகளுக்கு தேவையான கட்டு மானப் பொருள்களை சேமிக்குமிடம் (Material S tock Yard), பணியாளர்கள் தங்குவதற்கு (200 நபர்கள்) இடம், சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்சாரம், சாலை வசதி மற்றும் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமான நிறுவனம் இதுவரை 30 ஆயிரம் பாதுகாப்புப் பணி நேரத்தில் எந்தவொரு சிறு அசம்பாவிதமின்றி, பணிகளை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நாள்தோறும் பாதுகாப்பு தூண்டுதல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பணியாளர் களுக்கு கொடுக்கப்பட்டுவருகிறது. மேலும் பணியாளர்களின் அவசர உதவிக்காக
24 மணி நேரமும் ஆம்புலன்சு வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி (AIGA ENGG-PWD), கொடுக்கப்பட்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.