தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் 19.10.2024 அன்று தமிழ்நாடு பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம், தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமூக தீர்வு ஏற்பட்டது. இந்நிகழ்வின் போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.