வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலானோருக்கு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நோயாளிகளி டையே இந்த குறைபாட்டை கண்டறிவதிலும் சிகிச்சை அளிப் பதிலும் பல சமயங்களில் மருத்துவர்களே தவறிவிடுகின்றனர். அன்றாட உணவில் வைட்டமின் பி12-அய் நமக்கு வழங்கும் உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம்.
ஆனால், தினந்தோறும் மனிதர்களுக்கு 2.4 மைக்ரோகிராம் அளவு மட்டுமே வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இது மிகவும் குறைவானதே. ஆனால், இந்த அளவு குறைந்தாலும் நமக்கு பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படும்.
வைட்டமின் பி 12 குறைபாட்டின் முக்கிய அறிகுறி அதிகப்படியான சோர்வு. இதனால், நம் அன்றாட செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கும்.
பல்வேறு நரம்பியல் பிரச்சினைகள், குழப்பம், உணர் வின்மை, ஞாபக மறதி, சமநிலையை கடைப்பிடிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். வைட்டமின் பி12 குறை பாட்டை சரிசெய்யாவிட்டால் இந்த பிரச்சினைகள் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வைட்டமின் பி12 குறைபாடும் இதற்கு ஒரு காரணம் என்பதை மருத்துவர்கள் கண்டறிய தவறுகின்றனர். மேலும், ஆரோக் கியமான உணவு முறையை கொண்டிருப்பது வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தாது என நினைத்துக்கொள்கிறோம்
தாவர அடிப்படையிலான உணவுமுறையை பின்பற்று பவர்கள் மற்ற வைட்டமின்களின் தேவையை எப்படி மாத்திரை மூலம் பூர்த்திசெய்கின்றனரோ, அதேபோன்று பி12 மாத்திரை களையும் எடுக்கவேண்டும்.
வைட்டமின் பி12அய் உடல் உறிஞ்சும் செயல்பாடு சிக்கலான, பல படிநிலைகளை கொண்டது. அந்த செயல்பாடு, வாயில் தொடங்கி, சிறுகுடலில் முடிகின்றது. உணவை உண்ணும்போது உணவில் நமது உமிழ்நீர் கலக்கிறது. உணவை விழுங்கும்போது நமது வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் பி12 அழியாமல் காப்பதற்காக, நமது உமிழ்நீரில் உள்ள ஆர் புரோட்டீன் எனப்படும் புரதமும் உணவுடன் சேர்ந்து வயிற்றில் கலக்கிறது.
வைட்டமின் பி12 குறைபாட்டுக்கு வயிற்றில் குறைவான அளவு அமிலம் சுரப்பதும் காரணமாகிறது. அல்சருக்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகள் அல்சரை ஏற்படுத்தும் வயிற்று அமிலங்கள் சுரப்பை குறைக்கிறது. இந்த மாத்திரை களுக்கும் விட்டமின் பி12 குறைபாட்டுக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயது முதிர்வும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை குறைக்கிறது.
வயிற்றில் உள்ள சிறப்பு பாரிட்டல் செல்கள் மூலம் இரைப்பை அமிலம் மற்றும் இன்ட்ரின்சிக் ஃபேக்டர் உற்பத்தி பி12அய் உடல் உறிஞ்சுவதற்கு முக்கியமானது. ஆனால், வயிற்றுச்சுவரில் ஏற்படும் சிதைவும் இரண்டின் உற்பத்தியையும் பாதிக்கலாம். இரைப்பை அறுவை சிகிச்சை, நாள்பட்ட அழற்சி அல்லது தீங்கு விளைவிக்கும் ரத்த சோகை, சோர்வு மற்றும் பிற அறிகுறிகளால் வயிற்றுச்சுவர் சிதைவடைகிறது. கணையம் முறையாக செயல்படாததும் விட்டமின் பி12 குறைபாட்டுக்கு பொதுவான காரணமாகும்.
டைப் 2 நீரிழிவு நோய்க்காக எடுத்துக்கொள்ளப்படும் மெட் ஃபார்மின் மாத்திரைகளும் பி12 குறைபாட்டை உண்டாக்குகிறது.
பி12 குறைபாட்டுக்கான சிகிச்சை
வழக்கமான பரிசோதனையில் முழுமையான ரத்த எண்ணிக்கை மற்றும் வளர்சிதை மாற்றக் குழு ஆகியவையே கண் டறியப்படுகிறது. இவை இரண்டும் பி12அய் அளவிடுவதில்லை.
உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாட்டுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களிடம் சென்று நிச்சயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முழுமையான ரத்த அளவு மற்றும் பி12 பரிசோதனையை செய்ய வேண்டும். பி12 குறைபாட்டுக்கான காரணம் மற்றும் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சையும் அதற்கான கால அளவும் மாறுபடும். முழுமையாக குணமடைவதற்கு ஓராண்டு கூட ஆகலாம். ஆனால் அதற்கு முறையான சிகிச்சை தேவை. வைட்டமின் பி12 குறைபாட்டிற் கான சிகிச்சை மாத்திரைகள், மருந்துகள் வடிவிலும் இருக்கலாம் அல்லது அதற்கு பல்வேறு வகையான ஊசிகள் தேவைப் படலாம். விட்டமின் பி12 மாத்திரையும் இக்குறைபாட்டை சரிசெய்ய போதுமானதாக இருக்கலாம். ஆனால், முறையான பரிசோதனை மற்றும் மருத்துவரின் அறிவுரையுடன் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.