ஜெனீவா, ஜூலை 31- உலக உணவு திட்டத்தின் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரண மாக உலகளவில் லட்சக் கணக்கானோர் உணவு உதவிகளை நிறுத்த வேண்டிய கட்டாயத் துக்கு அய்.நா. தள்ளப் பட்டுள்ளது.
உள்நாட்டு போர், பொருளாதார நெருக் கடி, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச் சினைகளால் உணவுப் பற்றாக்குறையை எதிர் கொண்டு வரும் நாடுகளில் பட்டினியில் வாடும் கோடிக்கணக்கான மக்க ளுக்கு உலக உணவு திட் டம் என்ற பன்னாட்டு அமைப்பின் மூலம் அய்.நா. உணவு உதவியை வழங்குகிறது.
பன்னட்டு நாடுகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார் நன்கொடை யாளர்களிடம் இருந்து கிடைக்கும் தன்னார்வ நன்கொடைகள்தான் உலக உணவுத் திட்டத் தின் நிதி ஆதாரமாக உள்ளது. இந்த நிதியை கொண்டே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.
நன்கொடைகள் சரிந்ததால்…
இந்த நிலையில் உலக உணவு திட்டத்துக்கு கிடைக்கும் நன்கொடை கள் கிட்டத்தட்ட பாதி யாக சரிந்ததால் அந்த அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் லட்சக்கணக்கான மக்க ளுக்கு உணவு உதவியை நிறுத்த வேண்டிய கட் டாயத்துக்கு அந்த அமைப்பு தள்ளப்பட்டுள் ளது.
இது குறித்து உலக உணவுத் திட்டத்தின் துணை நிர்வாக இயக் குனர் கார்ல் ஸ்காவ் கூறியதாவது:-
உலக உணவுத் திட் டம் செயல்படும் 86 நாடு களில் ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா உள் பட 38 நாடுகளில் ஏற் கெனவே உதவிகள் நிறுத் தப்பட்டுள்ளன.
இன்னும் சில நாடு களில் விரைவில் உதவி களை நிறுத்த திட்டமிடப் பட்டுள்ளது. உலக உண வுத் திட்டம் முழுமையாக செயல்பட்டு தேவைப் படும் அனைவருக்கும் உதவி வழங்க 20 பில்லி யன் அமெரிக்க டாலர் கள் (சுமார் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடி) தேவைப்படும். ஆனால் நாங்கள் 10 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.82 ஆயிரம் கோடி) முதல் 14 பில்லியன் டாலர்க ளையே (சுமார் ரூ.1 லட் சத்து 15 ஆயிரம் கோடி) இலக்காக வைத்திருந் தோம். கடந்த சில ஆண்டு களில் அது கிடைக்கவும் செய்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த நிதி கிட்டத்தட்ட பாதியாக குறைந்தது. இதுவரை 5 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.41 ஆயிரம் கோடி) மட்டுமே கிடைத் துள்ளது.
கரோனா தொற்று நோய், உக்ரைன் போர் மற்றும் அதன் உலகளா விய தாக்கங்கள் காரண மாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மனி தாபிமான தேவைகள் பல மடக்கு அதிகரித்தன. ஆனால் அதற்கு நேர் மாறாக உலக உணவுத் திட்டத்தின் நிதி வறண்டு வருகிறது.
இதன் காரணமாக உணவு உதவிகளை நிறுத் துவது அல்லது குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி பசியின் அவசர நிலைகளை எதிர் கொள்ளும் ஆப்கானிஸ் தானில் உள்ள சமூகங்க ளுக்கு 75 சதவீதத்தி லிருந்து50 சதவீதமாக உணவு உதவியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி அங்கு கடந்த மே மாதத் தில் 80 லட்சம் மக்களுக்கு உணவை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட் டது.
அதேபோல் பாலஸ் தீனத்தில் உலக உணவுத் திட்டம் அதன் உதவியை மே மற்றும் ஜூன் மாதங் களில் 20 சதவிகிதம் குறைத்தது. ஏமனில், அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாத தொடக்கத்தில் 70 லட்சம் மக்களுக்கு உத வியை குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே மனிதாபி மான நிதியுதவிக்கு முன் னுரிமை அளிக்கவும், மோதல்கள், வறுமை, வளர்ச்சி மற்றும் தற் போதைய நெருக்கடியின் பிற மூல காரணங்களுக் கான நீண்டகால தீர்வுக ளில் முதலீடு செய்யவும் உலகத் தலைவர்களை நாங்கள் வலியுறுத்துகி றோம். இவ்வாறு அவர் கூறினார்.