சென்னை, ஜூலை 31- சென்னை அய்.அய்.டி., ‘கார்பன் ஜீரோ 3.0 சவால்’ என்ற சுற்றுச்சூழல் பாது காப்பிற்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கு விக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நாடு முழுவதும் இருந்து 408 அணிகள் பங்கேற்றன. அதில் 25 அணி கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் முதல் கட்டமாக 5 அணிகளுக்கு காசோலை வழங்கப்பட் டன.
இந்த காசோலையை அண்ணா பல்கலைக்கழ கத் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
ஆண்டுக்கு 2.9 ஜிகா டன் (ஒரு ஜிகா டன் என்பது 100 கோடி டன்) கார்பன் கழிவுகள் உரு வாகின்றன. 2 அல்லது 3 நூற்றாண்டுகளாக நாம் செய்த சூழலியல் குறை களுக்குக்கான பாதிப்புக் களை நாம் 2 அல்லது 3 தலைமுறையாக திரும்பப் பெற்று வருகிறோம்.
தொடக்கத்தில் ஒரு சதுர அடிக்கு 65 பி.பி.எம். என்ற அளவில் இருந்த கார்பனின் அளவு, தற் போது 400 என்ற அள வில் பதிவாகி வருகிறது. இதே அளவு 600-அய் தொடுமானால் அந்த சூழ்நிலை யில் மனிதனால் உயிர் வாழமுடியாது. தற் போது ஆண்டுக்கு 3 பி.பி.எம். அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த அளவுகளை பார்க்கும் போது, நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் சுத்தமான காற்றை சுவாசிக்க போகிறோம் என்பதை நாமே யோசித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.