ஆளுநர் பங்கேற்ற விழாவை அமைச்சர் புறக்கணிப்பு
தஞ்சாவூர், அக்.20 தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 14ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (19.10.2024) நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று 100 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 86 மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 212 மாண வர்களுக்கு முதுநிலை பட்டமும் உள்பட மொத்தம் 656 மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திண் டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான சாமிநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். அதே போல நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர்.