சமற்கிருதம் செம்மொழியல்ல
வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருத நாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய் வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமா யணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வட மொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகி யவை எந்த வகையிலும் இலக்கியத் தர மற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது
தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல் களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்பதையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
ஆசிரியர்:
இலக்குவனார் திருவள்ளுவன்; வெளியீடு:
நியூ செஞ்சுரி புக்கு அவுசு;
விலை: ரூ.100; பேசி : 044 26251968
– ‘தினத்தந்தி’, 30.07.2023