புதிய அணுகுமுறை கோவையில் குளத்தில் சோலார் பேனல்களை மிதக்க விட்டு மின் உற்பத்தி

2 Min Read

கோவை, அக். 20- தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் உள்ள உக்கடம் குளத்தில் சோலார் பேனல் களை மிதக்கவிட்டு மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் 154 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும்.
கோவை மாநகராட்சி சார் பில் உக்கடம் பெரியகுளத்தில் சோலார் பேனல்களை (சூரிய ஒளி மின்தகடு) மிதக்க விட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப் பட்டது.

அதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மன் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து சோலார் மூலம் மின்சாரம் எடுக்க குளத்துக்குள் சோலார் பேனல்களை மிதக்க விடும் பணி தொடங்கியது. இதற்காக இந்த குளத்தின் ஒரு பகுதியில் அரை ஏக்கரில் நங்கூரம் (ஆங்கரிங் மெத்தடு) முறையில் சோலார் பேனல்கள் மிதக்கவிடப்பட்டுள்ளன.

அதை கண்காணிக்கவும், அவற்றை யாரும் சேதப்படுத்தி விடுவதை தடுக்கவும் அங்கு இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் அங்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குளத்தின் உள்பகுதியில் தண்ணீரில் சோலார் பேனல்கள் மிதந்தபடி இருப்பதை உக்கடம் மேம்பாலத்தில் இருந்து பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தண்ணீரில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் எடுக்கும் முதல் பணி என்பதால் இந்த பணியை நேர்த்தியாகவும், விரைவாகவும் முடித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியும், ஜெர்மன் நாட்டு நிறுவனமும் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 45 லட்சத்தில் தண்ணீரில் சோலார் பேனல்களை மிதக்க விட்டு அதன் மூலம் மின்சாரம் எடுக்கும் பணி நடந்துவருகிறது. இதன் மூலம் நாள்தோறும் 154 கிலோவாட் மின்சாரம் எடுக்க முடியும்.

நங்கூரம் முறையில் சோலார் பேனல்கள் தண்ணீரில் மிதக்கவிடுவதால், குளத்தில் தண்ணீர் போது, இந்த குறையும் சோலார் பேனல்கள் தானாகவே கீழே செல்லும் தண்ணீர் அதிகரிக்கும்போது தானாக மேலே வந்துவிடும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரில் மூழ்காது. காற்று வீசும்போது, குளத்தில் அலை அடித்தாலும் சோலார் பேனல்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாது. அந்த வகையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் நாள்தோறும் தயாரிக் கப்படும் 154 கிலோ வாட் மின்சாரமும் மின்சாரத்துறைக்கு கொடுக்கப்படும். இதற்காக இந்த பகுதியிலேயே மின்மாற்றியும் அமைக்கப்படும். நமது நாட்டில் நர்மதை ஆற்றில் இது போன்று சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உக்கடம் குளத்தில்தான் முதல் முறையாக தண்ணீரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இன்னும் 2 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மின்சாரம் தயாரித்து வழங்கப்படும்.
-இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *