டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*ஜாதிவாரி கணக்கெடுப்பு, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கம், இவை இரண்டையும் நாங்கள் உறுதியாக செய்வோம் – ராகுல் பேச்சு.
* ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி தரப்பட வேண்டும் என்ற சட்டமன்ற தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கவுரி லங்கேஷ் கொலை குற்றவாளி சிறீகாந்த் பங்கார்கர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் தேர்தலுக்கு முன் இணைந்தார் – ஜல்னா சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* உ.பி.,யில் கோவில் அருகே உள்ள கைப்பம்பிலிருந்து தண்ணீர் குடித்ததற்காக தாழ்த்தப்பட்டவர் மீது தாக்குதல் – 7 பேர் மீது வழக்குப்பதிவு
* தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு
தி டெலிகிராப்:
* கரோனா காலத்தில் பாடங்களின் சுமையைக் குறைக்கிறோம் என்று காரணம் கூறி, பாடப் புத்தகங்களில் இருந்து நேரு, முகலாயர்கள் குறித்த பாடங்களை நீக்கிய என்.சி.இ.ஆர்.டி., கரோனா முடிந்தும் மீண்டும் அதை சேர்க்க வில்லை. 30 விழுக்காடு பாடத்திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் மற்றும் அரசாங்கத்தை மகிழ்விக்கும் நோக்கத்துடன் இருப்பதாக சில கல்வியாளர்கள் கருத்து.
– குடந்தை கருணா