பெரம்பலூர்,அக்.20- பெரம்பலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.10.2024 அன்று மாலை 5 மணிக்கு மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் பொ. பிறைசூடன் வரவேற்று உரையாற்றினார்.
மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் நாகை.மு.இளமாறன் திராவிட மாணவர் கழகத்தில் இணைய வேண்டும் ஏன் என்பது குறித்து தொடக்க உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கியும், திராவிட மாணவர் கழக அமைப்பு பணிகள் குறித்தும் விளக்கி தலைமை உரையாற்றினார்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி. தங்கராசு, மாவட்ட செயலாளர் மு. விசயேந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராசன், நகர தலைவர் ஆறுமுகம், மாவட்ட மகளிரணி தலைவர் மருத்துவர் கு.குணகோமதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட மாணவர் கழக செயலாளர் க.குமரேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கருத்தரங்கங்களை நடத்துவது மற்றும் வாயில் கூட்டங்களை நடத்துவது எனவும், உண்மை இதழுக்கு மாணவர் கழகம் சார்பில் சந்தாக்களை திரட்டுவது எனவும், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம் செய்வது எனவும், பள்ளி-கல்லூரிகளில் திராவிட மாணவர் கழக புதிய கிளைகளை உருவாக்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.