‘டிடி தமிழ்’ தொலைக்காட்சியின் பொன் விழாவும், ஹிந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் சென்னை சிவானந்தா சாலையில் இருக்கக்கூடிய சென்னை தொலைக்காட்சியில் (DD Tamil) 18.10.2024 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். முன்னதாக, இந்த விழாவில் ஆளுநர் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி தி.மு.க. மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னின்று நடத்தி கண்டன உரையாற்றினார்.