மருத்துவர் கவுதமனின் ‘மரணம்’ நூல் படித்தேன், வியந்தேன். பல மருத் துவர்களுக்கே தெரியாத செய்திகளை உண்மையாக, ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார். விஞ்ஞானப் பூர்வ மாக யாருமே எதிர்பாராத சில உண்மைகள் மருத்துவ ரீதியாக வெளி யிடப்பட்டுள்ளது. ‘இருப்போம்’ என்று இருப்பவன் கண்களை இறந்தவனல்லவோ திறந்து வைத்தான்’ என்கிற கவிஞர் சுரதா பாடல் போல இந்த உயிரற்ற உடல் – இறந்த பின் ஏற்படும் மாற்றங்களை அருமையான – அதிர்ச்சியான உண்மைகள் தெரிந்து வியந்து போனேன். எம்.பி.பி.எஸ்., பாடப் பிரிவில் உள்ள Physiology, Pathology, Forensic Medicine போன்ற எந்த பாடப் பிரிவுகளிலும் இவ்வளவு விளக்கமாக, கோர்வையாக, எளிதாக சொல்லப்படவில்லை. மூடநம்பிக் கைகளை புறந்தள்ளுவது மட்டுமின்றி, முக்கிய தகவல்களை பொது மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டால்தான் ‘இறந்தவனை இருப்பவனும் சுமக் கிறான்’ என்பதற்கு ஏற்ப வாழ்வின் தத் துவங்களை வாழ்வியலாகக் கொண்ட மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ முடியும். வளர்க மருத்துவர் கவுதமனின் பணி.
டாக்டர் ஜி.எஸ். குமார்,
மருத்துவர் அணி, திராவிடர் கழகம்