ராய்ப்பூர், அக்.19 சத்தீஸ்கர் மாநில பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் பேசிய பேச்சு, இணையத்தில் வைர லாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்து கொந் தளித்து போன காங்கிரஸ் கட்சி, பாஜகவை சரமாரியாக விமர் சித்து வருகிறது.. என்ன நடந்தது சத்தீஸ்கர் மாநிலத்தில்?
பல முறை அறிவியலுக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத வகையில், பாஜக தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.. சமீபத்தில்கூட, அசாம் மாநில சில்சார் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் திலீப் குமார்பால், சில்சாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்புரையாற்றினார்.
பகவான் கிருஷ்ணர்: அப்போது அவர், “பகவான் கிருஷ்ணர் இசைக்கும் தனித்துவமான புல்லாங்குழல் இசையைப்போல இசைத்தால், அதை காதால் கேட்கும் பசுக்கள் வழக்கத்தைவிட கூடுதலாகப் பால் கறக்கும். இது நவீன விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, பாஜக அமைச்சர் பேசும்போது, “ரத்த அழுத்த நோயாளிகள், அன்றாடம் காலை – மாலை பசுமாட்டை தடவிக்கொடுத்து அதற்கு உணவிட்டு வந்தால், 10 நாட்களில் அவர்களின் 20 எம்.ஜி அளவு மாத்திரைகள், 10 எம்.ஜி என குறைந்துவிடும்.. மாட்டுத் தொழுவத்தில் படுத்திருந்தால், ஆபத்தான புற்றுநோயும் குணமாகிவிடும், பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்” என்றெல்லாம் கூறியிருந்தார்.
சர்ச்சை: இப்போது இன்னொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதிர்த்திருக்கும் கருத்துகள் மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.. சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கர் மக்களவை தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போஜ்ராஜ் நாக்.. இவர் ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட அரசு திட்டங்களில் நிலவும் சிக்கல்களை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்..
அதில், “நான் இந்த திட்டத்தை பற்றி ஏற்ெகனவே சொன்னேன்.. மறுபடியும் சொல்கிறேன். ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்களை அலட்சியத்தால் சிலர் நாசப்படுத்துகின்றனர்.. இனியும் அவர்கள் இதுபோலவே, என் பேச்சுக்கு செவிசாய்க்காவிட்டால், அவர்களின் பெயரில் எலுமிச்சை பழம் வெட்டப்படும்” என்றார்.
காங்கிரஸ் : பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பகிரங்க எச்சரிக்கை, அரசியல் கட்சி தலைவர்களை அதிர செய்து வருகிறது.. அதிலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், “எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் இப்படியொரு அறிக்கையை வெளியிட மாட்டார்கள்.. இது கெட்ட வாய்ப்பானது. பாஜகவுக்குள் மூடநம்பிக்கை ஆழமாக உள்ளது. கரோனாவை விரட்ட மக்கள் கை தட்டுங்கள் என்று பிரதமரே சொன்னார் என்றால், இயற்கை யாகவே அவரை பின்பற்றுபவர்கள் இதே போன்ற நம்பிக்கைகளைத்தான் எதிரொலிப்பார்கள்” என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
மூடநம்பிக்கைகள்: அதேபோல, அந்தஷ்ரத்தா நிர்முலான் சமிதியின் தலைவர் டாக்டர் தினேஷ் மிஸ்ரா இதுகுறித்து சொல்லும்போது, “கடந்த சில நாட்களாகவே சத்தீஸ்கர் மாநிலத்தில் மூடநம்பிக்கை நிகழ்வுகள் அதிகமாகிவிட்டன.. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க சுகாதாரம் மற்றும் அறிவியல் குறித்த விழிப்புணர்வு அவசியம்..
பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிக்கும் தார்மீக கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கும் இருக்கிறது.. வளர்ச் சிக்கு தடையாக எந்த மந்திரமோ, பேயோ கிடையாது.. ஒருவேளை பேய்கள் இருந்திருந்தால், அவர்கள் தங்களை தாங்களே குணப்படுத்திக் கொள்வார்களே தவிர, மருத்துவர்கள் இதற்கு தேவைப்பட மாட்டார்கள்” என்றார்
நரபலிகள்: நாளுக்கு நாள் மூடநம்பிக்கை செயல்பாடுகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்து வருவது கவலையை தந்து வருகிறதாம்.. நரபலி, பில்லி சூன்யம் போன்றவை காரணமாக உயிர்கள் காவு வாங்கப்படுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2024 வரை, மூட நம்பிக்கை தொடர்பான 54 கொலைகள் சத்தீஸ்கரில் நடந்திருக்கிறதாம்.. 2021-இல் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மாந்திரீக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித் திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.