கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.10.2024

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அமெரிக்காவில் நடந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலையில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி விகாஸ் நேரடியாக ஈடுபட்டதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*ஜக்கியின் ஈஷா அறக்கட்டளையில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை நீதிமன்றத்தில் வரிசைப்படுத்தி அறிக்கையாக அளித்துள்ளது.

தி இந்து:

* குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்பது குழந்தை திருமணத்தை தடுக்க உருவாக்கப்பட்டதாகும். குழந்தை திருமண நிச்சயதார்த்தம் தண்டனையை தவிர்க்கும் தந்திரம். குழந்தை திருமண தடை சட்டத்தை தனிநபர் சட்டங்களால் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* ரயில்வேயில் ஏறத்தாழ மூன்று லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், புதியவர்களுக்கு வேலை அளிக்காமல், ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி செயல்பாடு களை பின்பற்றி, அடுத்த 70 ஆண்டுகளுக்கு சந்திர சேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி நிலைநிறுத்திக் கொள்ளும் என அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராம ராவ் பேச்சு.

தி டெலிகிராப்:

* வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்வது மிகவும் எளிதானது; வாக்கு சீட்டு தான் சிறந்த முறை என டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் பேட்டி.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *