ஹிந்தி மொழி பேசப்படாத மாநிலத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடுவது தவிர்க்கப்பட வேண்டும்

1 Min Read

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, அக். 19- ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன். விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து, 18ஆம் தேதி (நேற்று) நிறைவடையும் ஹிந்தி மாத நிறைவு விழா நடத்தப்படுவதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகி றேன். இந்த விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமை தாங்குகிறார்.
எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற தகுதியை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

சிறுமைப்படுத்தும் முயற்சி

இந்த சூழ்நிலையில் இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், ஹிந்தி பேசப்படாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதும், பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, ஹிந்தி பேசப்படாத மாநிலங்களில் இதுபோன்ற ஹிந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இது போன்ற ஹிந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தவிரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள் ளூர் மொழிக்கான மாதக் கொண் டாட்டங்களையும் அதே அளவில் கொண்டாட வேண்டும்.

மேலும், ஒன்றிய அரசு செம் மொழியாக அங்கீரித்துள்ள அனைத்துமொழிகளின் சிறப்பையும், செழுமையையும் கொண்டாட இதுபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்ற எனது கருத்தையும் கூறுகிறேன். இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *