தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி
திருப்பூர், அக்.19- திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 2.9.2024 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு திருப்பூர் தெற்கு ரோட்டரி மண்டபத்தில் கூடி யது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலு.இளங்கோவன் தலைமையேற்றார். வருகை தந்திருந்த அனைவரையும் மு.நாச்சிமுத்து வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வா.தமிழ்ப் பிரபா கரன் கலந்துரையாடல் கூட் டத்தின் நோக்கம், பேச்சுப்போட்டி நடத்துவது ஏன் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார் .
ஒருவர் பகுத்தறிவாளராக இருப்பதால் என்ன விளைவுகள் என்பதையும் எடுத்துக்கூறி நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பம், நண்பர்கள் எல்லோரிடமும் எடுத் துக்கூறுங்கள். தந்தை பெரியார் வழி என்பது அறிவியல்வழி… அது மனிதநேயமுள்ள எளிமையான வாழ்வியல் வழி என்பதை எடுத்துக்கூறினார்.
தொடர்ந்து அனைவரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் மு.நாச்சிமுத்து, ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.துரைசாமி , மாவட்ட திராவிடர் கழக தலைவர் யாழ்.ஆறுச்சாமி, வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆ.பாண்டியன், மாவட்ட செயலாளர் ப.குமரவேல், முத்து.முருகேசன், மகளிர் பாசறை மு.கிருஷ்ணவேணி, 43ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் சு.சாந்தாமணி, அ.ராமசாமி, மாநகர கழகத் தலைவர் கருணாகரன், மாநகர செயலாளர் பெ.செல்வராஜ், இளைஞரணி வானவில் துரைமுருகன், செல்வி மணிவேல், கி.சதீஸ்வரி கருவம்பாளையம் டி.எஸ்.தம்மன்ராஜ், தெற்கு தோட்டம் ஆறுமுகம், என்.துரைசாமி, கருவம்பாளையம் சா.பழனிச்சாமி, கைகாட்டிபுதூர் பொன்னுசாமி, களிமேடு மணிவேலு, ராம்நகர் துரைமுருகன், சிவ.முத்து சரவணன், ஓ.ஆர்.கே.புரம் முருகேசன், தி.முருகானந்தம், அமராவதி நகர் தமிழமுதன், நல்லதம்பி, கருணாகரன், குமரவேல், அவிநாசி ராமசாமி, பல்லடம் செல்வம், முத்தூர் அருணாச்சலம், மாநகர பகுத்தறி வாளர் கழக தலைவர் நாக.சதாசிவம், மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.கந்தசாமி ஆகியோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.
தொடர்ந்து பகுத்தறிவளர் கழக பொதுச்செயலாளர் வி .மோகன் திருப்பூரில் பகுத்தறிவாளர் கழகம் செயல்பாடுகள் குறித்து பேசினார். தொடர்ந்து திருச்சியில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் பன்னாட்டு பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுதந்திர சுய சிந்தனையாளர்கள் மாநாடு பற்றியும், மாநாட்டு ஏற்பாடுகள் பற்றியும் அந்த மாநாட்டில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், மாநாட்டிற்கு முழுமையான அளவு ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார். மாவட்ட அமைப்பை மாற்றி அமைப்பது பற்றியும், புதிய பொறுப்பாளர்கள் பொறுப்புகள் பற்றியும் தலைமையின் எதிர் பார்ப்பு பற்றியும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விடுதலை, உண்மை, மார்டன் ரேஷனலிஸ்ட், பெரியார் பிஞ்சு ஆகிய ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பது எனவும், பகுத்தறிவாளர் கழக அமைப்பை விரிவு படுத்தி ஒன்றிய அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பது எனவும், திருப்பூர் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்வது எனவும், மாவட்ட அமைப்பை மேலும் வலுவாக்கிட மு.நாச்சிமுத்துவை மாவட்ட செயலாளராகவும், மு.துரைசாமியை மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது. முடிவில் நளினம் நாகராசு நன்றி கூறினார்.
தொடர்ந்து மாணவர்களுக் கான பேச்சுப்போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு மாவட்ட பக தலைவர் வேலு.இளங்கோவன் தலைமை ஏற்றார். திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மு.நாச்சிமுத்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் யாழ்.ஆறுச்சாமி, வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆ.பாண்டியன், மாவட்ட செயலாளர் ப.குமரவேல், முத்து.முருகேசன், மகளிர் பாசறை மு.கிருஷ்ணவேணி, 43வது வட்ட மாமன்ற உறுப்பினர் சு.சாந்தாமணி, ஆசிரியர் அ.ராமசாமி, மாநகர திக தலைவர் கருணாகரன், மாநகர செயலாளர் பெ.செல்வராஜ், இளைஞரணி வானவில் துரைமுருகன், செல்வி மணிவேல் கி.சதீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
64 மாணவ- மாணவியர் கலந்துகொண்ட நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாக ரன், துணை மேயர் ஆர்.பால சுப்ரமணியம், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன், திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.
தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தலைமை ஆசிரியர் மு.துரைசாமி மாணவர்களிடம் போட்டி விதிமுறைகள்,நேரம், தொடங்கும் முறை ஆகியவற்றையும், நடுவர்களாக செயல்படுபவர்கள் பற்றியும் எடுத்துக்கூறினார்.
போட்டியை தொடங்கி வைத்த கிரித்தின்.கவியரசு மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளைக் கூறி தொடங்கி வைத்தார்.
போட்டியாளர்கள் தங்களது அபாரமான பேச்சுத்திறனை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்போது பார்வையாளர் களுக்கு தேநீர் வழங்கப்பட்டது. தொடந்து 01.30 மணிக்கு உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
மீண்டும் 02.00 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 04.30 மணியளவில் முடிவுற்றது. தொடந்து அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வேலு.இளங்கோவன் தலைமை ஏற்றார். மாணவர்களது திறமைகளை மு.நாச்சிமுத்து சிறப்பாக எடுத்துரைத்தார்.மாவட்ட அமைப்பாளர் மு.துரைசாமி நிகழ்வை ஒருங்கிணைத்தார். முன்னதாக மாணவர்களிடையே மாநில வழக்குரைஞர் அணி துணைத்தலைவர் ஆ.பாண் டியன் உரையாற்றினார். பொதுச்செயலாளர்கள் வி.மோகன், வா.தமிழ்ப் பிரபாகான் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.
போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்ட ஆசிரியர்களை அமைப்பாளர் துரைசாமி அறிமுகம் செய்திட அவர் கள் அனைவருக்கும் பகுத்தறி வாளர் கழக தலைவர் வேலு.இளங்கோவன் சிறப்பு செய் தார்.. போட்டியில் வெற்றி பெற் றவர்களை மாவட்ட திராவிடர் கழக தலைவர் யாழ். ஆறுச்சாமி அறிவித்தார்.
பேச்சுப்போட்டியில் மூன்றாமிடத்தை கேபிஆர் கலை, அறிவியல் கல்லூரி மாணவி ரா.பூரணா பெற்றார். இவருக்கு பாராட்டு சான்றிதழோடு ரூ 1000/- பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாமிடத்தை திருப்பூர் ஜெய்சிறீராம் பொறியியல் கல்லூரி மாணவி சி.சுவேதா பெற்றார். இவருக்கு பாராட்டு சான்றிதழோடு ரூ 2000/- பரிசாக வழங்கப்பட்டது.
முதலிடத்தை திருப்பூர் சிக்கண்ண அரசு கலை கல்லூரி மாணவர் ச.நாகராஜ் பெற்றார். இவருக்கு பாராட்டு சான்றிதழோடு ரூ3000/- பரிசாக வழங்கப்பட்டது.
இறுதியில் ஒட்டுமொத்த நிகழ்வை ஒருங்கிணைத்து சிறப்பாக கொண்டு சென்ற மாவட்ட அமைப்பாளர் மு.துரைசாமி நன்றி கூறினார்.