போளூர், அக்.19- திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 17.09.2024 அன்று தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முதலாவதாக போளூர் நகர கழக தலைவர். ப.பழனி தலைமை ஏற்று திராவிடர் கழகக் கொடியை “பெரியார் வாழ்க” என்ற ஒலி முழக்கங்களுடன் ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு தந்தை பெரியாரின் பெருந்தொண்டர், நினைவில் வாழும் வாயாடி சுப்பிரமணி அவர்களின் குமாரன் சு.பன்னீர்செல்வம்(வட்டாட்சியர் ஓய்வு) வரவேற்புரை ஆற்ற, தி.மு.க. நகர செயலாளர் கோ.தன சேகர், திரளான தி.மு.க. தோழர்களும், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள். இரா.வேதாசலம், (தேவிகா புரம்), வெற்றிச்செல்வன், கா.பழனி (போளூர்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்கள் பி.ஆறுமுகம், கி.பழனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்கள் இரவிதாசன், உதயகுமார், நடராஜன், வீரமுத்து ஆகியோர் பங்கேற்க நகரில் கழகக் கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. வெற்றிச்செல்வன் ஒலிமுழக்கம் எழுப்பினார். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்நாடு அரசு அறிவித்த “சமூக நீதி நாள் உறுதிமொழியை” தோழர்கள் அனைவரும் உரத்த குரலில் முழக்கமிட்டு உறுதி மொழி ஏற்றனர்.
முடிவில் ஜமுனாமரத்தூர் முதுகலை பட்டதாரி ஆசிரியை ரெஜினா மேரி மற்றும் கேளூர் பள்ளி ஆசிரியர் இரவிசந்திரன் ஆகியோர் “தந்தை பெரியார் தொண்டு இல்லாமல் நாங்கள் இன்று ஆசிரியர் ஆகியிருக்க முடியாது” எனக்கூறி பெரியார் படத்தை பார்த்து உடனே மீண்டும் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தும் வகையில் அவர்களும் மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.
நிகழ்வில் பங்கு கொண்ட அனை வருக்கும் வி.ப.பிரபாகரன் நன்றி கூறி, பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் அளித்து உபசரித்தார். விழா சிறப்புற நடந்தேறியது.