பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் கி. வீரமணி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அருகில் இந்திய வருவாய் பணி ஆணையர் எஸ். மருதுபாண்டியன், பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ. அன்புராஜ், பேராசிரியர் எம். தவமணி, காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முதன்மையர் எம்.ஜி. சேதுராமன், அறக்கட்டளையின் உறுப்பினர் மருத்துவர் சு. நரேந்திரன், துணைவேந்தர் வெ. இராமச்சந்திரன் மற்றும் பதிவாளர் பி.கே. சிறீவித்யா ஆகியோர் உள்ளனர். கருநாடக இசை கலைஞர், எழுத்தாளர் சமூக ஆர்வலர் மற்றும் கட்டுரையாளர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி பொன்னாடை அணிவித்து, தந்தை பெரியார் சிலையினை நினைவு பரிசாக வழங்கினார். பட்டம் பெற வந்த மாணவர்கள் உள்ளனர். (தஞ்சை, 19.10.2024)
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32ஆவது பட்டமளிப்பு விழா
Leave a Comment