இன்று இஸ்ரேல் நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கும் ஹஃபா-வில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கவர்மெண்ட் ஆப் பாலஸ்தீனம் – ஹஃபா மாகாணம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த துறை முகம் இஸ்ரேலின் மய்யப் பகுதியில் உள்ளது.
ஈரான் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேல் ராணுவத் தளங்களின் மீது பலஸ்டிக் என்னும் குறிபிட்ட இலக்கை மட்டுமே தாக்கும் ஏவுகணைகளை வீசியது.
அது பொதுமக்களுக்கும் குடி யிருப்பு பகுதிகளுக்கும் எந்த சேதத்தையும் விளைவிக்கவில்லை. ராணுவத் தளவாடம் மற்றும் விமானப் படை விமானங்களை மட்டுமே தாக்கி அழித்தது.
மீண்டும் ஈரான் இஸ்ரேலைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் இந்த ஹஃபா துறைமுகம் வழியாகத்தான் அருகில் உள்ள சைப்ரஸ் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு குடும்பம் குடும்பமாக இடம் பெயர்கின்றனர். இந்த மின்விளக்குத் தூண் ஒன்றே போதும் பாலஸ்தீனத்தை இஸ்ரேலியர்கள் எந்த அளவிற்கு அபகரித்துள்ளார்கள் என்பதற்கு இன்றும் சான்றாக உள்ளது.