பீகார் மாநிலத்தில் உள்ள துல்னா என்ற பகுதியில் உள்ள பள்ளியில் புதிதாக சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தலைமை ஆசிரியரின் வீட்டில் நடந்த விழாஒன்றில் அவர்களது அழைப்பின் பெயரில் கலந்துகொண்டார்.
அவர் சென்ற பின்னர் தலைமை ஆசிரியரும் அவர்களது வீட்டாரும் கங்கை நீரைக் கொண்டு அவர்களது வீட்டைக் கழுவி பூஜைகள் செய்து தீட்டுக் கழித்தனர்.
இதனைத் தெரிந்துகொண்ட அந்த இளம் ஆசிரியை உடனடியாக பள்ளிக்குச் சென்று அனைத்து கரும்பலகைகளிலும் ‘சமாரஜீ’ (தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெயர்) என்று எழுதி வைத்து முடிந்தால் பள்ளியில் உள்ள அனைத்து கரும்பலகைகளையும் கங்கை நீரால் கழுவி பூஜை செய்து புனிதப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவர் மீது புகார் அளித்துள்ளதாம் பள்ளி நிர்வாகம்.