கேள்வி 1: It had better rain heavily tomorrow. Many repetitions are at stake….. Today didn’t go as predicted. “மழைபெய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை” என்று ஒரு பிரபல மருத்துவர், ஊடகவியலாளர், பொருளாதார நிபுணர், விளையாட்டு விமர்சகர் என்ற பல பெயரில் வலம் வரும் ஒருவர் எழுதியுள்ளாரே – இது என்ன மனநிலை?
– சோ.சரவணன், ஆண்டிப்பட்டி
பதில் 1: அவருக்கு உடனே தேவை மனநல மருத்துவம். குரூர எண்ணம் உடையவர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் போலும் அவர்!
– – – – –
கேள்வி 2: “பசு மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்” என்று கூறுகிறாரே உ.பி. சாமியார் அரசின் அமைச்சர் ஒருவர்?
– பா.குமணன், கோவை
பதில் 2: அய்ந்து அறிவுள்ளவர்களுக்கு நாட்டில் பஞ்சமே இல்லையோ!
– – – – –
கேள்வி 3: வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு ஈடுபடுகையில் ‘சாம்சங்’ தொழிலாளர் வேலை நிறுத்தம் நெருடலாக இருக்கிறதே?
– வே.சண்முகம், ஆண்டிமடம்
பதில் 3: ‘விடுதலை’ 15.10.2024 அறிக்கையைப் படித்துப் பாருங்கள்!
– – – – –
கேள்வி 4: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதியை எந்தவிதக் காரணங்களுமின்றி ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது நீதியாகுமா?
– தா.மணிகண்டன், வேலூர்
பதில் 4: அது மக்கள் வரிப்பணம்; பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கஜானாவிலிருந்து தருவதல்ல. இதுதான் இவர்களது ‘Co-operative Federation’ என்ற ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ போலும்!
– – – – –
கேள்வி 5: மூத்த வழக்குரைஞர் வில்சன் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி குறிப்பிட்ட வார்த்தைகள் சரியா?
– பா.திவ்யபாரதி, அரும்பாக்கம்
பதில் 5: கண்டனங்கள் பெருத்தவுடன் அவர் பின்வாங்கி விட்டாரே! ,இதுதான் அவாள் வித்தை?
– – – – –
கேள்வி 6: தற்போதைய துணை முதலமைச்சரின் செயல்பாடுகள் பற்றி தங்களது பார்வை?
– ஜெ.ஆனந்த், மதுரை
பதில் 6: அவரது செயற்பாடுகளே அவரது ஆளுமைக்கான அளவீடுகள். மக்களுக்கு இப்போது புரிந்து வருகிறது.
– – – – –
கேள்வி 7: ஆதின நில குத்தகைத் தொகையை முறையாக தராததால்தான் பருவம் தவறி மழை பெய்வதாகவும், மக்களிடையே பக்தி குறைந்ததுதான் திடீர் மழை – வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணம் எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளாரே?
– மன்னை சித்து , மன்னார்குடி – 1.
பதில் 7: திருப்பதியிலும், பனிலிங்கம் உள்ள ஊர்க் கோயில்களிலும் கூட கடும் மழை, வெள்ளம் ஏற்படுகிறதே. அங்கே என்ன குத்தகை பாக்கியா? அட அறிவுக்கொழுந்துகளே!
– – – – –
கேள்வி 8: கருநாடகம், மகாராட்டிரம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் உள்ளதைப் போன்று திராவிட மாடல் ஆட்சி நடக்கின்ற தமிழ் நாட்டிலும் கொண்டுவரப்படுமா?
– இரா.சு.மணி, காட்பாடி.
பதில் 8: கொண்டுவர வற்புறுத்துவோம்.
– – – – –
கேள்வி 9: திராவிடர் கழகம் சார்பாக, சுயமரியாதைத் திருமண இணையர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை மாவட்டத் தலைநகரங்களில் ‘சுயமரியாதைத் திருமண இணையர்கள் மாநாடு’ நடைபெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுமா?
– எஸ். பத்ரா, வந்தவாசி.
பதில் 9: நல்ல யோசனை. சுயமரியதை இயக்க நூற்றாண்டான இவ்வாண்டிலேயே தொடங்குவோம். நன்றி!
– – – – –
கேள்வி 10: இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு ‘சமூகநீதிப் பாடல்’ ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். அது தற்போது நடைமுறைப்படுத்தப் படுகிறதா?
– செல்விபாபு, மதுரை
பதில் 10: பொறுத்திருந்து பாருங்கள்! சொல்வதை செய்வதே தி.மு.க. – திராவிட மாடல் அரசு.