கம்பீரம் இழந்த நீதி தேவதையும் – தராசும்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தெமிஸ் ஜஸ்டியா”

நீதிமன்றத்தில் வெள்ளை நிற பெண் சிலை ஒன்று கருமை நிற துணியை கண்ணில் கட்டி கொண்டு கையில் தராசுடன்
நீதி தேவதை பெயர் தான் சார் “தெமிஸ் ஜஸ்டியா”

நீதி தேவதையின் வரலாறு கிரேக் கத்தில் ஆரம்பிக்கிறது, கிரேக்க புராணத்தில் வரும் 12 தேவதைகளில் ஒருவர் தான் இந்த தெமிஸ் ஜஸ்டியா.
தெமிஸ் ஜஸ்டியாவின் நிறம் வெள்ளை அல்ல கருப்பு, கருமை நிறத்திலும் தேவதைகள் உண்டு தெமிஸ் ஜஸ்டியா- மேலாடையும் கருப்புதான்.
இன்று நீதிமன்ற பணியில் இருக்கும் வேளையில் நமது வழக்குரைஞர்கள் அணிகின்றார்கள் அல்லவா? ஒரு கருமை நிற மேலாடை, அது இவரின் மேலாடையிலிருந்து ஆடை-மரபின் தொடர்ச்சி.

இருதரப்புக்கும் சமமான நீதி வழங்கப்படும் என்பதற்கு அடையாளமாக கையில் தராசு மட்டும் தான் இருக்கும்.

ஆனால், இவர் இடது கையில் தராசும் இருக்கிறது, குற்றம் செய்தவர்களை தண்டிப்பதற்காக வலது கையில் நீண்ட வாளும் இருக்கிறது,
மேலும் அவரின் இடது கால் சட்ட சாசன புத்தகத்தின் மேல் இருக்கிறது, அதாவது சட்டத்தை தவிர கருதுவதற்கு வேறெதுவும் இல்லை, அந்த சட்டவிதிகளின் மேல் நின்றே தீர்ப்பு வழங்கப்படும் என்பதன் அடையாளம்.

அவரின் வலது காலினை படமெடுத்து வரும் பாம்பின் மீது வைத்திருப்பார் – நீதி வழங்குவதை தடுக்கும் எந்த தீய சக்தியும் பயமுறுத்தல்களும் செல்லுபடி ஆகாது, மேலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிட முடியாது என்பதையே அவர் அவ்வாறு வெளிப் படுத்துகிறார்.
பெண் ஏன் நீதிதேவதையாக்கப்பட்டாள் நீதி தேவன் ஏன் இல்லை என்றால் .. பெண்ணிடம் கருணை இருக்கும் கண்டிப்பும் இருக்கும், நீதியை நிலைநாட்டும் நிதானமும் இருக்கும் ஆகவே தான் நீதி தேவதையாக்கினார்கள்

முதலில் இந்த நீதி தேவதை எகிப்தின் மாட் தேவதை(நடுநிலையாக நின்று தீர்ப்பு வழங்கும் கடவுள்) தேவதையில் இருந்து தான் தேமிஸ் ஜஸ்டியா உருவாகினார்.

நீதி தேவதையின் சிலையில் கம்பீரம், கண்டிப்பு, நிமிர்ந்த முகம், வலுவான உடற்தோற்றத்தோடு, வீரமும் கலந்த கலவையாக செதுக்கப்பட்டது தான் நீதி தேவதையின் சிலை. ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய நீதி தேவதையில் சிலை சாந்தமான இந்தியப் பெண்ணை மனதில் கொண்டே செதுக்கப்பட்டுள்ளது. நீதியில் ஏது சாந்தம்?

ஆனால், இந்தியப் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மனுவே சொல்லி இருக்கிறது, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் உள்ள மனு சிலை, கம்பீரமான நீதி தேவதையை விரும்பாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *