கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி மாநகரில் ராமலீலா கொண்டாடினராம் – வைதீகர்கள். இராவண னையும், அவனது சந்ததிகளையும் அழித்த ராமனின் திருநாளாம் அது. அந்த சரித்திர எழுத்தாளர் (நேரு) பேரனுடன் சென்று இராவணனையும், கும்ப கர்ணனையும், இந்திரஜித்தையும் கொடும்பாவியாக்கி எரிக்கும் காட்சி – அல்ல, அல்ல; விழா காணச் சென்றிருக்கிறார்.
இந்திய சர்க்காரின் செய்தி இலாக்கா அந்த கோலாகலத்தை திரைப்படமாக்கி சினிமா கொட்ட கையில் திரையிட்டனர். திரையிலே காட்சி! பக்கத் திலேயிருந்த நண்பர் கருணாநிதி கேட்டார். “நாம் ராமன் உருவம் செய்து கொளுத்தினால் என்ன?
நான் பதில் தரவில்லை. நண்பர் கேட்டதுபோல் செய்தால் யார்தான் என்ன செய்யமுடியும்?”
– அறிஞர் அண்ணா, ‘திராவிட நாடு’ 28.10.1951