சென்னை, ஆக. 1- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முதியவர், இளை ஞரின் உடல் உறுப்புகள் கொடையால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
வேலூரைச் சேர்ந்த 62 வயது முதியவர் செல்வன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). சென்னையில் வசித்து வந்த முதியவர், கடந்த 25ஆ-ம் தேதி வண்டலூர் அருகே நடந்து போய் கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவ ருக்கு, அருகில் உள்ள தனியார் மருத்து வமனையில் முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக மறு நாள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மூளைச் சாவு அடைந்தார். உறவினர்களின் ஒப்புத லின்படி, அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகம், கண்கள் கொடையாக பெறப் பட்டு, 5 பேருக்கு பொருத்தப்பட்டன.
ராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றி வந்த அவர் கடந்த 19ஆ-ம் தேதி நெமிலிச் சேரி அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். அவருக்கு 10 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 27ஆ-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற் றப்பட்டார்.
மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச் சாவு அடைந்தார். மனைவியின் ஒப்பு தலின்படி அவரது ஒரு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் கொடையாக பெறப் பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டன.
சில தினங்களுக்கு முன்பு பிரசவத் தின்போது தனது குழந்தையை பறி கொடுத்த சோகமான சூழ்நிலையிலும் கணவரின் உடல் உறுப்புகளை மனைவி கொடை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.