சென்னை, அக். 18- வேளாண் துறைக்கான வாகனங்கள் மற்றும் புத்தாக்க தொழில்நுட்பத் திறனாய்வுத் தீர்வுகளை வழங்கி வரும் இந்தியாவின் டிராக்டர் ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ள சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம், டிராக்டர் தொழிலில் தனது திறனை மீண்டும் நிரூபித்து 2025-ஆம் நிதி ஆண்டுக்கான புதிய விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது.
இத்துறை தேக்கமடைந்துள்ள சூழலில் விவசாயிகளை மய்யமாகக் கொண்டு வேளாண் தீர்வுகளை அளித்ததன் மூலம் 7 மடங்கு வளர்ச்சியை எட்டி இந்த பிராண்ட் உலக அளவில் முன்னணியில் விளங்குகிறது.
சோனாலிகாவின் உறுதியான செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து 17 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் நம்பிக்கைக்குரிய பிராண்டாக வளர்ந்துள்ளது.
இதுகுறித்து இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமண் மிட்டல் கூறுகையில், “ஒவ்வொரு விவசாயியின் தேவையும் தனித்துவமானது, அதற்கேற்ப தனித்துவமான அணுகுமுறையுடன் வாடிக்கையாளர் விரும்பும் வகையிலான வேளாண் தீர்வுகளை கட்டாயம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்நிறுவனம். எங்களது பிரத்யேகமான அணுகுமுறை டிராக்டர் துறையில் புதிய சாதனைகள் மற்றும் உள்நாட்டு சந்தையில் நாளது தேதி வரை 63,136 டிராக்டர்கள் விற்பனை செய்து சாதனை புரிய வழியேற்படுத்தியுள்ளதோடு இந்திய டிராக்டர் சந்தையில் அதிக பங்களிப்பை அளிக்கவும் வழிவகுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.